அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் -ராஜன் செல்லப்பா கோஷ்டிகளிடையே வலுக்‍கிறது உட்கட்சிப் பூசல் - மதுரை எடப்பாடி தரப்பு வேட்பாளர் அறிமுகக்‍ கூட்டத்தை அமைச்சரும், நாடாளுமன்ற உறுப்பினரும் புறக்‍கணித்த அவலம்

Mar 21 2019 3:20PM
எழுத்தின் அளவு: அ + அ -

மதுரையில் எடப்பாடி தரப்பு நாடாளுமன்ற வேட்பாளர் அறிமுகக்‍ கூட்டத்தை அமைச்சர் ஆர்.பி. உதயகுமாரும், நாடாளுமன்ற உறுப்பினர் கோபால கிருஷ்ணனும் புறக்‍கணித்ததால், அக்‍கட்சிக்‍குள் நிலவும் கோஷ்டிபூசல் பூதாகரமாக உருவெடுத்துள்ளது.

மதுரை நாடாளுமன்றத் தொகுதிக்‍கான எடப்பாடி தரப்பு வேட்பாளரை அறிவிக்‍கும்போதே தலைமைக்‍ கழகத்தில் அமைச்சர் ஆர்.பி. உதயகுமாரும், மதுரை புறநகர் மாவட்டச் செயலாளர் ராஜன் செல்லப்பாவும் ஓ.பி.எஸ்., இ.பி.எஸ். முன்னிலையில் கடுமையாக மோதிக்‍ கொண்டனர். ராஜன் செல்லப்பாவின் மிரட்டலுக்‍குப் பணிந்து அவரது மகன் ராஜ சத்யன் மதுரை தொகுதியின் வேட்பாளராக அறிவிக்‍கப்பட்டார்.

இதன் காரணமாக மதுரையில் நேற்று நடைபெற்ற வேட்பாளர் அறிமுகக்‍ கூட்ட நிகழ்ச்சியை ஆர்.பி. உதயகுமார் புறக்‍கணித்தார். மேலும் ஓ.பி.எஸ். ஆதரவாளரான மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் கோபாலகிருஷ்ணனும் இந்தக்‍ கூட்டத்தை புறக்‍கணித்து தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார்.

இதேபோல் மேலூரில் நடைபெற்ற வேட்பாளர் அறிமுகக்‍ கூட்டத்தின்போதும் எடப்பாடி தரப்பு முன்னாள் சட்டமன்ற உறுப்பினரின் ஆதரவாளர்களும், மேலூர் நகரச் செயலாளரின் ஆதரவாளர்களும் கடுமையாக மோதிக்‍கொண்டனர்.

ராஜன் செல்லப்பாவுடனான கருத்து வேறுபாடு காரணமாக அமைச்சர் செல்லூர் ராஜூவின் ஆதரவாளர்களும் மேலூர் கூட்டத்தைப் புறக்‍கணித்தனர். இதனால் இந்த அறிமுகக்‍ கூட்டம் கலகலத்துப் போனது. இதனை எதிர்பார்க்‍காத அமைச்சர் செல்லூர் ராஜூ, தொண்டர்களையும் நிர்வாகிகளையும் பார்த்து எச்சரிக்‍கும் தொனியில் ஏளனமாக பேசியதால், அங்கிருந்த தொண்டர்கள் அனைவரும் கூட்டத்திலிருந்து வெளியேறினர். மதுரை அதிமுக-வில் தொடரும் இதுபோன்ற உட்கட்சி மோதலால், எடப்பாடி கூடாரம் செய்வதறியாமல் திகைத்து நிற்கிறது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00