பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவம் : சி.பி.ஐ விசாரணைக்கான அரசாணையில், மாணவியின் பெயரைச் சேர்த்து, பாதிக்கப்பட்டோரை மிரட்டும் பழனிச்சாமி அரசுக்கு டிடிவி தினகரன் கடும் கண்டனம்

Mar 15 2019 10:00AM
எழுத்தின் அளவு: அ + அ -
பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவத்தில், சி.பி.ஐ விசாரணைக்கான அரசாணையில், மாணவியின் பெயரைச் சேர்த்து பாதிக்கப்பட்டோரை மிரட்டும் பழனிச்சாமி அரசுக்கு திரு. டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

கழக துணைப் பொதுச்செயலாளர் திரு. டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில், தமிழ்நாட்டில் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள பொள்ளாச்சி பாலியல் பயங்கரத்தில் மனசாட்சியை மொத்தமாக கழற்றி வைத்துவிட்டு பழனிச்சாமி அரசு அடுத்தடுத்த அக்கிரமங்களைச் செய்து வருவதாக தெரிவித்துள்ளார். சி.பி.ஐ விசாரணைக்குப் பரிந்துரைக்கும் அரசாணையில் புகார் கொடுத்த பாதிக்கப்பட்ட மாணவியின் பெயர், அவர் படிக்கும் கல்லூரி ஆகியவற்றைக் குறிப்பிட்டிருப்பது இதுவரை எப்போதுமே நடந்திராத மிக மோசமான செயல் என்றும், பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பெண்கள் பற்றிய விவரங்களை வெளியிடக் கூடாது என்று உலகம் முழுக்க கடைபிடிக்கப்படும் நெறிமுறைகளையும், உச்சநீதிமன்றத்தின் அறிவுரைகளையும், பழனிச்சாமி அரசு காலில் போட்டு மிதித்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஏற்கனவே அந்தப் பெண்ணின் பெயரை காவல்துறை வெளியிட்டு, இவ்விவகாரத்தில் புதிய புகார்கள் வருவதைத் தடுத்திருப்பதாகவும், இப்போது அரசாணையிலேயே பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயரை வெளிப்படையாக குறிப்பிட்டு பொள்ளாச்சி பாலியல் குற்றவாளிகளைப் பற்றி யாரும் புகார் தருவதைத் தடுக்கும் வகையில் செயல்படும் பழனிச்சாமி அரசை வன்மையாக கண்டிப்பதாகவும் திரு. டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். என்ன நினைத்துக்கொண்டு இவ்வளவு பட்டவர்த்தனமாக எல்லாவற்றையும் செய்கிறார்கள் என்று தெரியவில்லை - மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் - அந்தக் குற்றவாளிகளுக்கு மட்டுமல்ல - அவர்களைக் காப்பாற்றத் துடிப்பவர்களுக்கும் நிச்சயம் தண்டனை உண்டு என திரு. டிடிவி தினகரன் குறிப்பிட்டுள்ளார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3091.00 Rs. 3306.00
மும்பை Rs. 3114.00 Rs. 3297.00
டெல்லி Rs. 3127.00 Rs. 3312.00
கொல்கத்தா Rs. 3127.00 Rs. 3309.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 40.40 Rs. 40400.00
மும்பை Rs. 40.40 Rs. 40400.00
டெல்லி Rs. 40.40 Rs. 40400.00
கொல்கத்தா Rs. 40.40 Rs. 40400.00