பொள்ளாச்சி சம்பவத்தை சி.பி.சி.ஐ.டி. மற்றும் சி.பி.ஐ. இரண்டுமே விசாரிப்பதால் சிக்கல் - பொதுமக்‍களிடம் சி.பி.சி.ஐ.டி. தகவல்களை சேகரிப்பதால் குழப்பம்

Mar 14 2019 6:07PM
எழுத்தின் அளவு: அ + அ -
பொள்ளாச்சி சம்பவத்தை சி.பி.சி.ஐ.டி. மற்றும் சி.பி.ஐ. இரண்டுமே விசாரிப்பதால், வழக்கை கையாள்வது யார் என பொதுமக்களிடையே குழப்பம் ஏற்பட்டுள்ளது.

பொள்ளாச்சி சம்பவம் தொடர்பாக, தமிழக அரசு அடுத்தடுத்து குழப்பமான அறிவிப்புகளையே வெளியிட்டு வருகிறது. இந்த விவகாரத்தில் நியாயமான விசாரணை வேண்டுமென மாநிலம் முழுவதும் போராட்டங்கள் வலுத்து வருகின்றன. மாவட்ட காவல்துறையிடம் இருந்து சி.பி.சி.ஐ.டி.க்‍கு விசாரணை மாற்றப்பட்ட நிலையில், இந்த வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்ற தமிழக அரசு பரிந்துரை செய்யவுள்ளதாக, நேற்று முன்தினமே தகவல்கள் வெளியாகின. ஆனால், சி.பி.சி.ஐ.டி. ஐஜி ஸ்ரீதர் மற்றும் எஸ்.பி நிஷா ஆகியோர் தலைமையில் திருநாவுக்கரசின் பண்ணை வீட்டில் நேற்று, சோதனை நடத்தினர். பல்வேறு போராட்டங்களின் விளைவாக விசாரணையை சி.பி.ஐ.க்‍கு மாற்றியதாக, தமிழக அரசு இன்று அறிவித்தது. தற்போது, பொள்ளாச்சி சம்பவம் தொடர்பாக பொதுமக்‍கள் கருத்துகளை தெரிவிக்‍கலாம் என சி.பி.சி.ஐ.டி. அறிவித்துள்ளது. பொள்ளாச்சி விசாரணை சி.பி.ஐ.க்‍கு மாற்றப்பட்ட நிலையில், பொதுமக்‍களிடம் சி.பி.சி.ஐ.டி.யும் தகவல்களை சேகரிப்பதால், வழக்கை விசாரிப்பது யார் என குழப்பம் ஏற்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3196.00 Rs. 3418.00
மும்பை Rs. 3219.00 Rs. 3409.00
டெல்லி Rs. 3233.00 Rs. 3424.00
கொல்கத்தா Rs. 3233.00 Rs. 3421.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 43.60 Rs. 43600.00
மும்பை Rs. 43.60 Rs. 43600.00
டெல்லி Rs. 43.60 Rs. 43600.00
கொல்கத்தா Rs. 43.60 Rs. 43600.00