பொள்ளாச்சி சம்பவத்தில் தொடர்புடையவர்களை கைது செய்ய வலியுறுத்தி போராடிய மாணவர்கள் மீது அடக்‍குமுறையை கையாண்ட காவல்துறைக்‍கு டிடிவி தினகரன் கடும் கண்டனம் - அத்துமீறியவர்கள் மீது நடவடிக்‍கை எடுக்‍கவும் வலியுறுத்தல்

Mar 15 2019 11:57AM
எழுத்தின் அளவு: அ + அ -
பொள்ளாச்சி சம்பவத்தில் தொடர்புடையவர்களை கைது செய்ய வலியுறுத்தி போராட்டம் நடத்தும் மாணவர்கள் மீது அடக்‍குமுறையை கையாண்ட காவல்துறைக்‍கு, அம்மா மக்‍கள் முன்னேற்றக்‍ கழக துணைப் பொதுச் செயலாளர் திரு. டிடிவி தினகரன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து திரு. டிடிவி தினகரன் இன்று வெளியிட்டுள்ள அறிக்‍கையில், பொள்ளாச்சி பாலியல் பயங்கரத்தில் தொடர்புடை அனைவரையும் கைது செய்யக்கோரி போராடிய மாணவர்கள் மீது காவல்துறையினர் மேற்கொண்ட அடக்குமுறையை அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் வன்மையாக கண்டிப்பதாக குறிப்பிட்டுள்ளார். தமிழகத்தையே அதிரவைத்திருக்கும் பொள்ளாச்சி விவகாரத்தில், பழனிச்சாமி அரசு மற்றும் காவல்துறையின் செயல்பாடுகள் நாளுக்குநாள் சந்தேகத்தை அதிகப்படுத்தி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கைது செய்யப்பட்டு 15 நாட்கள் ஆன பிறகும் குற்றஞ்சாட்டப்பட்டவர்களை இதுவரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை - சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றுவதாக சொன்னபிறகு சி.பி.சி.ஐ.டி அதிகாரிகள் திடீரென போய் விசாரிக்கிறார்கள் - 'அரசியல் வாரிசுகளுக்கு 100 சதவீதம் தொடர்பில்லை' என்று கோவை எஸ்.பி. பேட்டி கொடுத்த பின்னர், அ.தி.மு.கவில் இருந்து நீக்கப்பட்ட பார் நாகராஜ் இருக்கும் புதிய வீடியோக்கள் வெளியாகி இருப்பதாக செய்திகள் வந்துள்ளதை திரு. டிடிவி தினகரன் சுட்டிக்‍காட்டியுள்ளார்.

மர்மங்கள் நிறைந்த பொள்ளாச்சி பாலியல் பயங்கரத்தில் உண்மை குற்றவாளிகளைப் பிடிப்பதை விட்டுவிட்டு, பழனிச்சாமி அரசு, காவல்துறையை ஏவி மாணவர்களைத் தாக்குவது, கல்லூரிகளை மூடுவது போன்ற வேலைகளில் ஈடுபட்டிருப்பது கடும் கண்டனத்திற்குரியது என அவர் தெரிவித்துள்ளார். மாணவர்களிடம் அத்துமீறி நடந்த காவல்துறையினர் மீது உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்காது என்றும், மாணவர்களோடு களமிறங்கி, பொள்ளாச்சியில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைப்பதற்காக போராடும் என்றும் திரு. டிடிவி தினகரன் எச்சரித்துள்ளார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
 • MEDHUVA PESUNGA

  Mon - Fri : 06:57

 • KELVIGAL AAYIRAM

  Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

 • MAKKALODU MAKKAL SELVAR

  Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

 • ACHUM ASALUM

  Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3091.00 Rs. 3306.00
மும்பை Rs. 3114.00 Rs. 3297.00
டெல்லி Rs. 3127.00 Rs. 3312.00
கொல்கத்தா Rs. 3127.00 Rs. 3309.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 40.40 Rs. 40400.00
மும்பை Rs. 40.40 Rs. 40400.00
டெல்லி Rs. 40.40 Rs. 40400.00
கொல்கத்தா Rs. 40.40 Rs. 40400.00