தமிழகம் முழுவதும் தீவிரமடைகிறது மாணவர் போராட்டம் - பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் தொடர்புடையவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

Mar 13 2019 5:43PM
எழுத்தின் அளவு: அ + அ -
பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் தொடர்புடையவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்ககோரி, மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் மாணவர்கள் இன்று வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பொள்ளாச்சியில் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட அனைத்து குற்றவாளிகளை கைது செய்வதுடன் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க கோரி துத்துக்குடியில் வ.உ.சி. கலை கல்லூரி மாணவர்கள் இன்று வகுப்புகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, குற்றவாளிகள் மற்றும் தமிழக அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர்.

இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்களுக்‍கு மரணத் தண்டணை வழங்கக்‍கோரி திருச்சி எம்.ஐ.இ.டி. கல்லூரி மாணவர்கள், கல்லூரி சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மரண தண்டனை வழங்கும் வரை தங்களது போராட்டத்தை தொடருவோம் என அவர்கள் எச்சரித்தனர்.

பொள்ளாச்சி வன்கொடுமை சம்பவத்தைக்‍ கண்டித்தும், குற்றச் செயல்களில் தொடர்புடையவர்களை தூக்‍கிலிட வலியுறுத்தியும் திருவாரூர் மாவட்டம் திரு.வி.க. அரசு கலைக்‍கல்லூரி மாணவிகள் வகுப்புகளை புறக்‍கணித்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். எடப்பாடி அரசைக்‍ கண்டித்தும், காவல்துறையினரின் பொறுப்பற்ற நடவடிக்‍கையையும் கண்டித்தும் கோஷமிட்டனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3091.00 Rs. 3306.00
மும்பை Rs. 3114.00 Rs. 3297.00
டெல்லி Rs. 3127.00 Rs. 3312.00
கொல்கத்தா Rs. 3127.00 Rs. 3309.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 40.40 Rs. 40400.00
மும்பை Rs. 40.40 Rs. 40400.00
டெல்லி Rs. 40.40 Rs. 40400.00
கொல்கத்தா Rs. 40.40 Rs. 40400.00