பா.ம.க கூட்டணியால் இ.பி.எஸ் அணியில் கடும் அதிருப்தி - சி.வி சண்முகம் போர்க்‍ கொடி

Feb 20 2019 12:03PM
எழுத்தின் அளவு: அ + அ -

பாமகவுடன் இபிஎஸ் அணி தொகுதி உடன்பாடு ஏற்படுத்தியதால் அதிருப்தியடைந்த அமைச்சர் சி.வி.சண்முகம் பேச்சுவார்த்தையில் பங்கேற்காமல் புறக்‍கணித்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

மக்களவைத் தேர்தலுக்‍காக இ.பி.எஸ் அணி- பா.ம.க இடையே இன்று கூட்டணி உடன்படிக்‍கை எட்டப்பட்டது.

பாமகவுக்கு தருமபுரி, கடலூர், அரக்கோணம், விழுப்புரம் உள்ளிட்ட 7 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. இதில் கடலூர், விழுப்புரம் தொகுதிகள் பா.ம.கவிற்கு ஒதுக்‍கப்பட்டதற்கு சி.வி சண்முகம் கடும் அதிருப்தி அடைந்துள்ளதாகவும் இதனால் பேச்சுவார்தையில் பங்கேற்காமல் புறகணித்ததாகவும் கூறப்படுகிறது.

தருமபுரி தொகுதியில் கடந்த தேர்தலில் அன்புமணி ராமதாஸ் போட்டியிட்ட வெற்றி பெற்றதற்கு, அப்போது கே.பி.முனுசாமி ஆதரவு இருந்ததாக வெளியான தகவலையடுத்து அப்போது மாண்புமிகு அம்மா, கே.பி.முனுசாமி‌யை கட்சியை விட்டு ஒதுக்கியிருந்தார். அவரது அனைத்து பதவிகளும் பறிக்கப்பட்டிருந்தன. அதைத்தொடர்ந்து பின்னர் கே.பி.முனுசாமி ஓ.பி.எஸ் ஆதரவாளராக மாறினார். இந்த நிலையில் தருமபுரி பா.ம.க விற்கு ஒதுக்‍கப்பட்டதற்கு கே.பி முனுசாமி, கடும் அதிருப்தியில் ஆழ்ந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00