ஈரோடு மாவட்டத்தில் மக்கள் சந்திப்பு புரட்சிப் பயணம் மேற்கொண்டுள்ள கழக துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரனுடன், கழக நிர்வாகிகள் சந்திப்பு

Feb 18 2019 4:25PM
எழுத்தின் அளவு: அ + அ -

ஈரோடு மாவட்டத்தில் மக்‍கள் சந்திப்பு புரட்சிப் பயணம் மேற்கொண்டுள்ள கழக துணைப் பொதுச் செயலாளர் திரு. டிடிவி தினகரனை, கழக நிர்வாகிகள் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

பவானிசாகர் பேரூர் கழக செயலாளர் திரு. செல்வத்தின் மகள் திருமணம் அண்மையில் நடைபெற்றது. இதனையடுத்து அன்னூர் தோட்டத்திலுள்ள அவரது வீட்டுக்குச் சென்ற கழக துணைப் பொதுச் செயலாளர் திரு. டிடிவி தினகரன், புதுமண தம்பதியினர் ஆர். கெளவதம் - பூர்ணிமா ஆகியோரை வாழ்த்தினார். அப்போது திரு. செல்வத்தின் குடும்பத்தினர் திரு. டிடிவி தினகரனுடன், குழு புகைப்படம் எடுத்துக்‍கொண்டனர்.

ஈரோடு மாவட்டம் கொத்துக்காட்டில் திரு டிடிவி தினகரனை, சிவகங்கை மாவட்டம் பாகனேரி தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கத் தேர்தலில், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற நிர்வாகிகள், கழக பொதுக்குழு உறுப்பினர் திரு. தேவதாஸ் தலைமையில் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

அப்போது கழக இளைஞர் பாசறை இணைச் செயலாளர் திரு. டி. ஆண்டனிராஜ், மாவட்ட அம்மா பேரவை செயலாளர் திரு. தேர்பூகி பாண்டி, காளையார்கோயில் வடக்கு ஒன்றிய கழக செயலாளர் திரு. மகேந்திரன் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் உடனிருந்தனர்.

ஈரோடு புறநகர் மாவட்டத்தைச் சேர்ந்த கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுடன் திரு. டிடிவி தினகரன் புகைப்படம் எடுத்துக் கொண்டார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00