தமிழக அரசின் பட்ஜெட் காதிலே பூ வைப்பதுபோல் உள்ளது - டிடிவி தினகரன் விமர்சனம்
Feb 11 2019 6:18PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மத்திய அரசின் பட்ஜெட் காகித பூ என்றால், தமிழக அரசு இன்று அறிவித்த பட்ஜெட் காதிலே பூ என கழக துணைப் பொதுச் செயலாளர் திரு.டிடிவி தினகரன் விமர்சித்துள்ளார்.
தமிழக அரசின் பட்ஜெட் குறித்து கருத்து தெரிவித்துள்ள திரு.டிடிவி தினகரன், சட்டப்பேரவையில் அரசின் பட்ஜெட்டிலேயே அளிக்கப்பட்டிருக்கும் ஒப்புதல் வாக்குமூலத்தின்படி, பழனிசாமியும், பன்னீர்செல்வமும் தமிழக மக்களைப் பற்றி கவலைப்படாமல், மத்திய அரசின் அடிவருடியாக இருந்துகொண்டு, தனிப்பட்ட சுய லாபங்களுக்காக மாநிலத்தின் நலன்களை மொத்தமாக அடகுவைத்துவிட்டது அப்பட்டமாக தெரிவதாக குறிப்பிட்டுள்ளார்.
இத்தகைய திறனற்றவர்களை ஆட்சியில் இருந்து அகற்றுவதே நம் மாநிலத்தை மீட்டெடுக்க ஒரே வழி என்பதை பன்னீர்செல்வத்தின் வாய் மூலமாகவே சொல்லியிருக்கிறது இந்த பட்ஜெட்- தமிழகத்தை பாலைவனமாக்கும் மேகதாது அணை திட்டத்தை எதிர்த்து ஒரு வார்த்தைக்கூட பட்ஜெட்டில் சொல்லப்படாதது வருத்தமளிக்கிறது என்றும் திரு.டிடிவி தினகரன் விமர்சித்துள்ளார்.