ஆரம்ப சுகாதார நிலையத்தில் போடப்பட்ட தவறான தடுப்பூசியால், 45 நாட்களே ஆன பச்சிளம் குழந்தை உயிரிழப்பு - தாராபுரத்தில் நடந்த பரபரப்பு சம்பவத்தால் பொதுமக்கள் கொந்தளிப்பு
Feb 8 2019 1:04PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் போடப்பட்ட தவறான தடுப்பூசியால், 45 நாட்களே ஆன பச்சிளம் குழந்தை உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தாராபுரம் நகர்ப்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் விஜயலட்சுமி-சுரேஷ்குமார் தம்பதியருக்கு, கடந்த 45 நாட்களுக்கு முன்பு அறுவைச் சிகிச்சை மூலம் பெண் குழந்தை பிறந்துள்ளது. இந்தப் பெண் குழந்தை சரியான எடையுடனும், ஆரோக்கியத்துடனும் இருந்த நிலையில், மருத்துவர்களின் ஆலோசனைப்படி நேற்று தடுப்பூசி போடப்பட்டுள்ளது. பின்னர் குழந்தைக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால், தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு பணியில் இருந்த மருத்துவர், குழந்தைக்கு மருத்துவம் பார்க்காமல் திருப்பி அனுப்பியதாக கூறப்படுகிறது. இதையடுத்து பச்சிளம் பெண் குழந்தை தாராபுரம் அரசு மருத்துவமனையிலேயே இறந்துவிட்டது.
தடுப்பூசி போட்ட ஒரே நாளில் பச்சிளம் குழந்தை இறந்த சம்பவம் தாராபுரம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.