விவசாயிகளுக்கு உறுதுணையான கால்நடைகளுக்கு நன்றி தெரிவிக்கும் விழாவான மாட்டுப் பொங்கல் : தமிழகம் முழுவதும் கோலாகலமாகக் கொண்டாட்டம்

Jan 17 2019 6:28PM
எழுத்தின் அளவு: அ + அ -

உலகுக்‍கே உணவளித்து, மக்‍களின் உயிர் காக்‍கும் விவசாயிகளுக்‍கு உறுதுணையான கால்நடைகளுக்‍கு நன்றி தெரிவிக்‍கும் விழாவான மாட்டுப் பொங்கல் தமிழகம் முழுவதும் கோலாகலமாகக்‍ கொண்டாடப்பட்டது.

வேலூர் மாவட்ட கிராமங்களில் மாடுகளுக்‍குப் பொங்கலிட்டு வழிபட்டனர். ஸ்ரீபுரத்தில் அமைந்துள்ள லட்சுமி ஸ்ரீ நாராயணி பொற்கோவில் வளாகத்தில் 700க்‍கும் மேற்பட்ட பசுமாடுகள் வளர்க்‍கப்பட்டு வருகின்றன. மாட்டுப்பொங்கலையொட்டி, அங்குள்ள மாடுகளுக்‍கு அலங்காரம் செய்து வழிபட்டனர்.

திருச்சி மாநகர் பகுதியான பாலக்‍கரையில் உள்ள கோ சாலையில் உள்ள நூற்றுக்‍கணக்‍கான மாடுகளுக்‍கு வர்ணம் தீட்டி, சலங்கை கட்டி அலங்கரித்தனர். பின்னர் பொங்கல், பழம் கொடுத்து வணங்கி மகிழ்ந்தனர்.

நெல்லை மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் மாட்டுப் பொங்கல் விழா உற்சாகமாகக்‍ கொண்டாடப்பட்டது. பாளையங்கோட்டை அருகே உள்ள தனியார் கல்லூரியில் கொண்டாடப்பட்ட விழாவில், மாடுகள் அலங்கரிக்‍கப்பட்டன. இதனைத் தொடர்ந்து கோ பூஜை நடத்தப்பட்டது.

நாகை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மாட்டுப் பொங்கல் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. நெட்டி மாலைகளால் அலங்கரித்து, கோ பூஜை செய்து வழிபட்டனர்.

அரியலூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலுள்ள கோ சாலைகளில் பராமரிக்‍கப்பட்டுவரும் மாடுகளுக்‍கு வண்ணம் பூசி, அலங்கரித்து வழிபாடு நடத்தினர். பின்னர் கற்பூர தீபாராதனை காட்டி உணவு வழங்கி மகிழ்ந்தனர்.

சென்னை எம்.ஜி.ஆர். நகர் பகுதியைச் சேர்ந்த மக்‍கள், மாட்டுப்பொங்கலை முன்னிட்டு பசுமாட்டிற்கு அலங்காரம் செய்து கோ பூஜை நடத்தினர். மாடுகளுக்‍கு பொங்கல், பழங்கள் வழங்கப்பட்டன.

மாட்டுப் பொங்கலையொட்டி, புதுச்சேரி கிராமங்களில் கால்நடைகளை சுத்தப்படுத்தி வழிபட்டனர். உழவுத் தொழிலுக்‍கு பயன்படுத்தும் டிராக்‍டர் உள்ளிட்ட உபகரணங்களையும் சுத்தம்செய்தனர். மாடுகளுக்‍கு நன்றி தெரிவிக்‍கும் வகையில், படையல் வைத்து சிறப்பாக கொண்டாடி மகிழ்ந்தனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00