திருச்சி மாவட்டம் சூரியூரில் ஜல்லிக்கட்டில் சீறிப்பாயும் முரட்டுக்காளைகள் : அடங்காத காளைகளை அடக்கி வரும் மாடுபிடி வீரர்கள்

Jan 16 2019 5:35PM
எழுத்தின் அளவு: அ + அ -

மாட்டுப் பொங்கலையொட்டி, திருச்சி மாவட்டம் சூரியூரில் ஜல்லிக்‍கட்டுப் போட்டி உற்சாகமாக நடைபெற்று வருகிறது. வாடிவாசல் வழியாக சீறிப்பாயும் காளைகளை, மாடுபிடி வீரர்கள் தீரத்துடன் அடக்‍கி வருகின்றனர்.

மாட்டுப் பொங்கலையொட்டி, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டான ஜல்லிக்‍கட்டுப் போட்டிகள் உற்சாகத்துடன் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில், திருச்சி மாவட்டம் சூரியூரில், வழக்‍கமான உற்சாகத்துடன் ஜல்லிகட்டு போட்டி நடைபெற்று வருகிறது. இதில் 500 ஜல்லிகட்டு காளைகள் ஒன்றன் பின் ஒன்றாக வாடிவாசல் வழியாக அவிழ்த்துவிடப்பட்டு வருகின்றன. துள்ளிக்‍ குதிக்‍கும் காளைகளை, 450-க்‍கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் தீரத்துடன் அடக்‍கி வருகின்றனர்.

பிற்பகலை 3 மணி வரை நடைபெறவுள்ள இந்த ஜல்லிக்‍கட்டுப் போட்டியில், வெற்றிபெறும் மாடுபிடி வீரர்களுக்‍கும், காளைகளின் உரிமையாளர்களுக்‍கும் ரொக்‍கம் உள்ளிட்ட பல்வேறு பரிசுகள் வழங்கப்படுகின்றன. ஆயிரக்‍கணக்‍கான பார்வையாளர்கள் ஆரவாரத்துடன் ஜல்லிக்‍கட்டை கண்டுகளித்து வருகின்றனர். மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஜியா உல் ஹக் தலைமையில் 700-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00