தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை தமிழகம் முழுவதும் உற்சாகத்துடன் கொண்டாட்டம் : சாதி மத பேதமின்றி அனைத்து மக்களும் பொங்கல் வைத்து மகிழ்ச்சி

Jan 16 2019 12:25PM
எழுத்தின் அளவு: அ + அ -

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை தமிழகம் முழுவதும், உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. சாதி மத பேதமின்றி அனைத்து மக்‍களும் பொங்கல் வைத்து, மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர்.

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் நகராட்சியில் பணிபுரியும் அனைத்து ஊழியர்கள் சார்பிலும், நகராட்சி ஆணையர் தலைமையிலும் கரும்புகள், வாழை தோரணங்கள் கட்டி பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்டது. புதுப்பானைகள் வைத்து புத்தரிசி, வெல்லம், முந்திரி, திராட்சைகள் இட்டு புதுப்பானையில் பொங்கல் பொங்கி வர பறையடித்து "பொங்கலோ பொங்கல்" என மகிழ்ச்சி பொங்கி ஏற்றத்தாழ்வுகள் இல்லாத சமத்துவ பொங்கலை கொண்டாடினர். இதில் ஆணையர் முதல் அனைத்து ஊழியர்களும் கலந்து கொண்டுடனர்.

நீலகிரி மாவட்டம் உதகை அருகேயுள்ள பகல்கோடு மந்து பகுதியில் தோடர் பழங்குடியின மக்கள் பாரம்பரிய உடை அணிந்து பொங்கல் வைத்து சிறப்பாக கொண்டாடினர். இந்த நிகழ்ச்சியில் தோடர் பழங்குடியினர் மற்றும் சிறுவர்கள் தங்களது பாரம்பரிய நடனத்தை ஆடி பாடி மகிழ்ந்தனர். இந்நிகழ்ச்சி அங்கிருந்த சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்தது.

திருப்பூர் மாவட்டம், பல்லடத்தில், தாய் அறக்கட்டளை சார்பில் "தை மகளே வருக" என்ற பெயரில் எட்டாம் ஆண்டு பொங்கல் விழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் உழவு, உணவு, உணர்வு என்ற பெயரில் பாரம்பரிய உணவுப் பொருட்கள், பண்டைய தமிழர் பயன்படுத்திய பொருட்களின் கண்காட்சி நடத்தப்பட்டது. உறியடி, சிலம்பம், கயிறு இழுத்தல், தப்பாட்டம், கும்மியாட்டம், பறையடித்தல், நாட்டுப்புறப் பாட்டு, மரக்கால் ஆட்டம் உள்ளிட்ட ஏராளமான பாரம்பரிய கலைநிகழ்ச்சிகளும் நடைபெற்றன. மேலும் பாரம்பரிய நாட்டு மாடுகள், காளைகள் காட்சிப்படுத்தப்பட்டன.

அதனைத்தொடர்ந்து சாதனையாளர்களுக்கு விருது வழங்கும் விழாவும் நடைபெற்றது. இதில் உலகத் தமிழர் பேரமைப்புத் தலைவர் திரு. பழ.நெடுமாறன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு விருதுகளை வழங்கி சிறப்புரையாற்றினார்.

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே கீழமாத்தூர் கிராமத்தில் பொங்கல் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதில், ஆஸ்திரேலியா, ஜெர்மனி, பெல்ஜியம், அமெரிக்கா, உள்ளிட்ட நாடுகளிலிருந்து சுமார் 200க்கும் மேற்பட்ட வெளிநாட்டினர் கலந்து கொண்டனர். அவர்களை தமிழ் பாரம்பரிய முறைப்படி நெற்றியில் திலகமிட்டு கிராம மக்கள் வரவேற்றனர். அதனை தொடந்து அங்கு நடைபெற்ற கரகாட்டம், ஒயிலாட்டம், சிலம்பாட்டம், போன்ற கிராமிய கலை நிகழ்ச்சிகளை வெளிநாட்டினர் கண்டு ரசித்து, நடனமாடி மகிழ்ந்தனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00