மத்திய ஆயுதப்படை போலீஸ் கேன்டீன்களில், வெளிநாட்டு பொருட்களுக்‍கு தடை - மத்திய அரசு நடவடிக்‍கை

Jun 2 2020 11:19AM
எழுத்தின் அளவு: அ + அ -

மத்திய ஆயுதப்படை போலீஸ் கேண்டீன்களில், வெளிநாட்டு பொருட்கள் மற்றும் இறக்குமதி செய்யப்பட்ட பொருட்கள் இனி விற்பனை செய்யப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, டாபர், நெஸ்லே உள்பட பல்வேறு நிறுவனங்களின் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தயாரிப்புகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில், CAPF கேண்டீன்களில், ஜூன் 1-ம் தேதியில் இருந்து உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட பொருட்கள் மட்டுமே விற்பனை செய்யப்படும் என மத்திய அரசு கடந்த 13-ம் தேதி அறிவித்தது. இதன்படி, வெளிநாட்டு பொருட்கள் மற்றும் இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களில் இருந்து தயாரிக்கப்படும் பொருட்கள் விற்பனை செய்யப்படாது என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த உத்தரவு நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது. டாபர் இந்தியா, கோல்கேட், நெஸ்லே இந்தியா போன்ற பிரபல நிறுவனங்கள் உட்பட பல்வேறு நிறுவனங்களின் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தயாரிப்புகளுக்கு, CAPF கேண்டீன்களில் தடை விதிக்கப்பட்டுள்ளது. இங்கு ஆண்டு முழுவதும் 2 ஆயிரத்து 800 கோடி ரூபாய்க்கு வர்த்தகம் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00