இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் மோதும் ஒருநாள் கிரிக்கெட் போட்டி : சென்னையில் இன்று டிக்கெட் விற்பனை தொடக்கம்

Dec 8 2019 1:23PM
எழுத்தின் அளவு: அ + அ -

சென்னையில் நடைபெறும் இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கான டிக்கெட் விற்பனை இன்று தொடங்குகிறது.

இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான, முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி, சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில், வரும் 15-ம் தேதி பிற்பகல் 1.30 மணிக்கு தொடங்கி பகலிரவு ஆட்டமாக நடைபெற உள்ளது.

சேப்பாக்கத்தில் 2 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கும் முதல் ஒருநாள் போட்டி இது என்பதால், ரசிகர்கள் கூட்டம் அலைமோதும் என்றுக் கூறப்படுகிறது. இந்த போட்டிக்கான டிக்கெட் விற்பனை, சென்னை சேப்பாக்கத்தில் உள்ள தமிழ்நாடு கிரிக்கெட் சங்க அலுவலக கவுண்ட்டர்களில், இன்று காலை 10.30 மணிக்கு தொடங்குகிறது. இந்த ஆட்டத்துக்கான குறைந்தபட்ச டிக்கெட் விலை ஆயிரத்து 200 ரூபாய். சொகுசு வசதி உடைய அதிகபட்ச டிக்கெட் விலை 12 ஆயிரம் ரூபாய். ஒரு நபருக்கு, 2 டிக்கெட்டுக்கு மேல் விற்பனை செய்யப்பட மாட்டாது. சென்னை ஒருநாள் போட்டிக்கான டிக்கெட்டுகளை www.paytm.com மற்றும் www.insider.in ஆகிய இணையதளங்களில், ஆன்லைன் மூலம் பெறலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00