பங்களாதேஷ் - இந்தியா மோதும் இரண்டாவது டி-20 கிரிக்கெட் - மழை அச்சுறுத்துவதால் இன்று போட்டி நடக்குமா?

Nov 7 2019 12:19PM
எழுத்தின் அளவு: அ + அ -

இந்தியா - பங்களாதேஷ் அணிகள் மோதும் 2-வது T20 கிரிக்கெட் போட்டி, குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் இன்று நடைபெறவுள்ளது. மழை அச்சுறுத்தல் இருப்பதால் இப்போட்டி நடைபெறுவது சந்தேகமாகி உள்ளது.

இந்தியா - பங்களாதேஷ் அணிகளுக்‍கு இடையே 3 போட்டிகள் கொண்ட T20 தொடர் நடைபெற்று வருகிறது. டெல்லியில் நடைபெற்ற முதலாவது ஆட்டத்தில், 7 விக்கெட் வித்தியாசத்தில் பங்களாதேஷ் அணி வெற்றி பெற்று, 1-0 என முன்னிலை பெற்றுள்ளது. இந்நிலையில், இவ்விரு அணிகள் மோதும் 2-வது T20 கிரிக்கெட் போட்டி, குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் இன்று நடைபெறவுள்ளது. இந்திய அணி, பங்களாதேஷூக்‍கு பதிலடி கொடுக்க வேண்டிய கட்டாயத்துடன் இன்றைய ஆட்டத்தில் களமிறங்குகிறது.

அதேசமயம், தொடர்ச்சியாக 2-வது போட்டியிலும் வெற்றிபெற்று, T20 தொடரை கைப்பற்றி சாதனை படைக்க பங்களாதேஷ் அணி வரிந்துகட்டுவதால், இன்றைய ஆட்டம் விறுவிறுப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வெற்றியை இலக்‍காகக்‍ கொண்டு இரு அணி வீரர்களும் நேற்று தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டனர். இதனிடையே, இன்றைய போட்டியின் மூலம் 100வது டி20 போட்டியில் விளையாடும் முதல் இந்திய வீரர் என்ற பெருமையை, அதிரடி வீரர் ரோகித் சர்மா பெற்றுள்ளார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00