போட்டியின்றி பி.சி.சி.ஐ., தலைவராகிறார் சவுரவ் கங்குலி? : விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என தகவல்

Oct 14 2019 9:08AM
எழுத்தின் அளவு: அ + அ -

பி.சி.சி.ஐ., எனப்படும் இந்திய​கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவராக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி போட்டியின்றி தேர்வு செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்திய கிரிக்கெ‌ட் கட்டுப்பாட்டு வாரியத்தில், தலைவர், செயலாளர் உள்ளி‌ட்டோரை தேர்ந்‍தெடுப்பதற்கான தேர்தல் நடைபெற உள்ளது. இதில், தலைவர் பதவிக்கு, இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், மேற்கு வங்க மாநில கிரிக்கெட் சங்க தலைவருமான சவுரவ் கங்குலி போட்டியிடுகிறார்.

இந்நிலையில், தலைவர் பதவிக்கு, சவுரவ் கங்குலி போட்டியின்றி தேர்வு செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதே போல், பி.சி.சி.ஐ., செயலாளர் பதவிக்கு, மத்திய உள்துறை அமைச்சர் திரு. அமித் ஷாவின் மகன் திரு. ஜே ஷா போட்டியிடுகிறார். மத்திய நிதித் துறை இணை அமைச்சர் திரு. அனுராக் தாக்குரின் சகோதரர் திரு. அருண் துமால், பொருளாளர் பதவிக்கு போட்டியிடுகிறார்.

இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் புதிய தலைவராக, இந்திய அணியின் முன்னாள் வீரர் பிரிஜேஷ் படேல் தேர்ந்தெடுக்கப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது. இவை குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு, விரைவில் வெளியாகும் எனத் தெரிகிறது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00