சிலம்ப வீரர்களுக்கு அரசு பணியில் ஒதுக்கீடு வழங்க நடவடிக்கை - இந்திய சிலம்பாட்ட சம்மேளனத் தலைவர் ராஜேந்திரன்

Sep 9 2019 9:41AM
எழுத்தின் அளவு: அ + அ -

சிலம்பாட்ட வீரர்களுக்கு கல்வியில் முன்னுரிமை வழங்கப்பட்டு வருவதாக இந்திய சிலம்பாட்ட சம்மேளனத் தலைவர் ராஜேந்திரன் ஐ.ஏ.எஸ். தெரிவித்துள்ளார்.

காஞ்சிபுரம் மாவட்ட சிலம்பாட்ட கழகம் சார்பில், மாவட்ட அளவிலான சிலம்பப்போட்டி பூந்தமல்லி அருகேயுள்ள காட்டுப்பாக்கதில் நடைபெற்றது. சப் ஜூனியர், ஜூனியர், சீனியர், சூப்பர் சீனியர் உள்ளிட்ட பிரிவுகளில் போட்டி நடத்தப்பட்டன. இதில் காஞ்சி, திருவள்ளூர், சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டத்தைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட வீர ,வீராங்கனைகள் கலந்து கொண்டனர். இந்த போட்டிகளில் ஆண்களுக்கு நிகராக பெண்களும் சிலம்பத்தை சுழற்றியது பார்வையாளர்களை பிரமிக்க வைத்தது.

இறுதியாக வெற்றி பெற்ற வீரர்களுக்கு தமிழக சிலம்பாட்ட கழக தலைவரும், இந்திய சிலம்பாட்ட சம்மேளத் தலைவருமான ராஜேந்திரன் ஐ.ஏ.எஸ். பரிசுகளையும், சான்றுகளையும் வழங்கினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ராஜேந்திரன், சிலம்ப வீரர்களுக்கு கல்வியில் முன்னுரிமை வழங்கப்பட்டு வருவதாகவும், சிலம்ப கலையை கற்றுக்கொள்ள ஆண்களுக்கு நிகராக பெண்களும் ஆர்வம்காட்டி வருவதாகவும் தெரிவித்தார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00