கர்ப்பம் தரித்த நியூசிலாந்து மகளிர் கிரிக்‍கெட் அணி கேப்டன் - சக வீராங்கனையை கரம்பிடித்த நிலையில் கர்ப்பம் தரித்தது எப்படி?

Aug 21 2019 4:28PM
எழுத்தின் அளவு: அ + அ -

நியூசிலாந்து மகளிர் கிரிக்‍கெட் அணியின் கேப்டன் சட்டர்த்வெய்ட், சக வீராங்கனையை திருமணம் செய்து கொண்ட நிலையில், திடீரென அவர் கருத்தரித்திருப்பது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

நியூசிலாந்து பெண்கள் கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருப்பவர் அமெ சட்டர்த்வெய்ட். இவர், அதே அணியின் சக வீராங்கனையும், வேகப்பந்து வீச்சாளருமான 28 வயதான லியா தாஹூஹூவுடன் நெருங்கிப்பழகினார். ஒன்றாக வசித்து வந்த இவர்கள் 2017-ம் ஆண்டு மார்ச் மாதம் திருமணம் செய்து கொண்டனர். இந்த நிலையில் சட்டர்த்வெய்ட் தான் கர்ப்பமாக இருப்பதாகவும், இந்த மகிழ்ச்சியான தகவலை ரசிகர்களுடன் பகிர்ந்து கொள்வதில் பரவசமாக உள்ளது என்றும் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அடுத்த ஆண்டு ஜனவரியில் குழந்தை பிறக்கும் என்று எதிர்பார்ப்பதாகவும், தங்களது வாழ்வின் புதிய அத்தியாயத்திற்காக ஆவலுடன் காத்திருக்கிறோம் என்றும் அதில் குறிப்பிட்டுள்ளார்.

நியூசிலாந்து நாட்டில் ஓரின சேர்க்கையாளர் திருமணத்துக்கு சட்டபூர்வ அங்கீகாரம் அளிக்‍கப்பட்டுள்ளது. எனினும் சக வீராங்கனையை கரம்பிடித்த சட்டர்த்வெய்ட் எப்படி கர்ப்பமானார் என்ற விவரத்தை தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்‍கது.

இதனால் அடுத்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடக்கும் பெண்கள் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் சட்டர்த்வெய்ட் விளையாட முடியாது. 2021-ம் ஆண்டு சொந்த மண்ணில் நடக்கும் 50 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு முன்பாக அவர் களம் திரும்ப திட்டமிட்டுள்ளார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00