உலகக்‍ கோப்பை கிரிக்கெட் அரையிறுதி வாய்ப்பை தக்க வைத்தது இங்கிலாந்து - முக்கியமான லீக் ஆட்டத்தில் இந்திய அணியை வீழ்த்தியது

Jul 1 2019 4:40PM
எழுத்தின் அளவு: அ + அ -

உலகக்‍ கோப்பை கிரிக்கெட் போட்டியில், இந்திய அணியை தோற்கடித்து, அரையிறுதி வாய்ப்பை இங்கிலாந்து தக்‍க வைத்துக்‍கொண்டது.

உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில், இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 38-வது லீக் ஆட்டம், பர்மிங்காமின் எட்ஜ் பாஸ்டன் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி, முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இதனைத்தொடர்ந்து களமிறங்கிய அந்த அணி, ஆட்ட நேர முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 337 ரன்களை எடுத்தது. அதிகபட்சமாக அந்த அணியின் Jonny Bairstow 111 ரன்கள் குவித்தார். இந்தியா தரப்பில், Mohammed Shami 5 விக்‍கெட்டுகளை வீழ்த்தினார்.

338 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பின்னர் களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க வீரர்களாக லோகேஷ் ராகுல் மற்றும் ரோகித் சர்மா ஆகியோர் களமிறங்கினர். லோகேஷ் ராகுல் டக் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார். அடுத்து ரோகித் சர்மாவுடன் இணைந்த கேப்டன் விராட் கோலி, 66 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதிரடியாக விளையாடிய ரோகித் சர்மா 102 ரன்கள் எடுத்தார். இதனைத்தொடர்ந்து களமிறங்கிய ஹர்திக் பாண்ட்யா 45 ரன்களும், எம்.எஸ். தோனி 42 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். இறுதியில், இந்திய அணி 5 விக்கெட்டுகளை இழந்து 306 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் இங்கிலாந்து அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. Liam Plunkett 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

5-வது வெற்றியைப் பெற்ற இங்கிலாந்து அணி, 10 புள்ளிகளுடன் 4-ம் இடம் பிடித்து, அரையிறுதிக்‍கான வாய்ப்பை தக்‍க வைத்துக்‍கொண்டது. 11 புள்ளிகளுடன் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது.

உலகக்‍ கோப்பை கிரிக்‍கெட்டில், Chester-le-Street-ல் இன்று பிற்பகல் 3.00 மணிக்‍கு நடைபெறவுள்ள 39-வது லீக்‍ ஆட்டத்தில், வெஸ்ட் இண்டீஸ் அணியை, இலங்கை அணி எதிர்கொள்கிறது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00