பாக் ஜலசந்தி கடற்பகுதியை 10.30 மணி நேரத்தில் கடந்து சாதனை

Mar 29 2019 5:53PM
எழுத்தின் அளவு: அ + அ -

தேனியை சேர்ந்த தனியார் பள்ளி மாணவர், பாக் ஜலசந்தி கடற்பகுதியை 10 மணி நேரம் 30 நிமிடங்களில் கடந்து குற்றாலீஸ்வரனின் சாதனையை முறியடித்துள்ளார்.

தேனி மாவட்டம் அல்லிநகரை சேர்ந்த ரவிக்குமார்-தாரணி தம்பதியின் மகன் ஆர். ஜெய் ஜஸ்வந்த், கடந்த 2016-ம் ஆண்டுமுதல் பல்வேறு நீச்சல் போட்டிகளில் பங்கேற்று பதக்‍கங்களை வென்றுள்ளார்.

இலங்கை தலைமன்னாரில் இருந்து தனுஷ்கோடி வரையிலான பாக் ஜலசந்தி கடற்பகுதியை நீந்திக் கடந்து சாதனை படைப்பதற்காக ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து ஒரு விசைப்படகு, ஒரு நாட்டுப்படகில் மாணவர் ஜெய் ஜஸ்வந்த் மற்றும் மீனவர்கள், பயிற்சியாளர் எம். விஜயக்குமார் ஆகியோர் தலைமன்னாருக்குப் புறப்பட்டனர்.

தலைமன்னாரில் இருந்து நீந்தத் தொடங்கிய மாணவர், தனுஷ்கோடி வரையிலான 30 கிலோமீட்டர் தூர பாக் ஜலசந்தி கடலை 10 மணிநேரம் 30 நிமிடங்களில் கடந்தார். ஜெய் ஜஸ்வந்தை ஏடிஜிபி சைலேந்திரபாபு தலைமையிலான காவல்துறை அதிகாரிகள் தனுஷ்கோடி அரிச்சல்முனையில் வரவேற்றனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00