ஆசியக்கோப்பை கால்பந்து தொடர் : ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் இந்திய அணி தோல்வி

Jan 11 2019 11:49AM
எழுத்தின் அளவு: அ + அ -

ஆசியக்‍கோப்பை கால்பந்து தொடரில், ஐக்‍கிய அரபு எமிரேட்ஸ் அணிக்‍கு எதிரான லீக் ஆட்டத்தில் இந்திய அணி தோல்வியடைந்தது.

ஆசியக்கோப்பை கால்பந்து தொடர் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெறுகிறது. 24 அணிகள் இத்தொடரில் பங்கேற்றுள்ளன. இந்த அணிகள் 6 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. லீக் சுற்றின் முடிவில் முதல் இரண்டு இடங்களைப் பெறும் அணிகள் நாக்-அவுட் சுற்றுக்குத் தகுதி பெறும். அபுதாபியில் நடைபெற்ற, முதல் லீக் போட்டியில் இந்திய அணி தாய்லாந்தை வீழ்த்தி 55 ஆண்டுகளுக்கு பின்னர் வரலாறு படைத்தது. இந்நிலையில் இரண்டாவது போட்டியில் ஐக்‍கிய அரபு எமிரேட்ஸ் அணியை இந்திய அணி எதிர்கொண்டது. போட்டியின் 41வது நிமிடத்தில், ஐக்‍கிய அரபு எமிரேட்ஸ் அணி, முதல் கோல் அடித்தது.

இரண்டாவது பாதியிலும் இந்திய அணி வீரர்கள் சரியாக செயல்படாததால், ஆட்டத்தின் 88-வது நிமிடத்தில் யு.ஏ.இ வீரர் அலி மவுஹர் இரண்டாவது கோல் அடித்தார். இறுதியில் இந்திய அணி, 2-0 என்ற கோல் கணக்கில் தோல்வியை சந்தித்தது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00