இந்திய கிரிக்‍கெட் அணி தேர்வில் தொடர்ந்து தவறுகள் நடைபெறுகின்றன - ஆஸ்திரேலியாவுக்‍கு எதிரான தோல்வி குறித்து முன்னாள் கேப்டன் கவாஸ்கர் விமர்சனம்

Dec 19 2018 6:26PM
எழுத்தின் அளவு: அ + அ -

இந்திய கிரிக்‍கெட் அணி தேர்வில் தொடர்ந்து தவறுகள் நடைபெறுவதாக முன்னாள் கேப்டன் கவாஸ்கர் குற்றம் சாட்டியுள்ளார்.

ஆஸ்திரேலியாவுடனான டெஸ்ட் தொடரில் முதல் போட்டியில் வென்றபோதும், 2வது போட்டியில் இந்தியா தோல்வியடைந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முன்னாள் வீரர்கள் பலர் இதனைக்‍ கடுமையாக விமர்சித்துள்ளனர். அண்மையில் தென்னாப்பிரிக்‍காவில் நடைபெற்ற டெஸ்ட் தொடரிலிருந்து இந்திய அணிக்‍கான வீரர்கள் தேர்வில் தொடர்ந்து தவறுகள் நடைபெறுவதாக கவாஸ்கர் குற்றம் சாட்டியுள்ளார்.

இந்திய அணியின் செயல்பாட்டில் குறைபாடுகள் இருப்பதாகவும், அதனை களைவதற்கான வழிமுறைகளை அணி நிர்வாகம் கண்டறிய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். மேலும், இந்த டெஸ்ட் தொடருக்‍குப் பிறகு அணியின் கேப்டன் கோலி, பயிற்சியாளர் ரவிசாஸ்திரி ஆகியோரின் பங்களிப்பு குறித்து ஆய்வு செய்வது அவசியம் என்றும் கவாஸ்கர் கேட்டுக்‍ கொண்டுள்ளார்.

ஆஸ்திரேலியாவுடனான 2வது டெஸ்ட்டில் இந்திய அணி தோற்றதற்கு சுழற்பந்து வீச்சாளரை சேர்க்‍காததும், மோசமான பேட்டிங்குமே காரணம் என பல்வேறு தரப்பிலும் தொடர்ந்து விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00