இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இன்று மீண்டும் மோதல் - தொடர்ச்சியாக 4-வது சதம் அடித்து சங்ககராவின் சாதனையை சமன் செய்வாரா விராட் கோலி?

Oct 29 2018 11:09AM
எழுத்தின் அளவு: அ + அ -

இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்‍கு இடையிலான 4-வது ஒருநாள் போட்டி, மும்பையில் இன்று நடைபெறவுள்ளது. இப்போட்டியிலும் விராட் கோலி சதமடித்து, இலங்கை வீரர் சங்ககராவின் சாதனையை சமன் செய்வாரா? என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வரும் வெஸ்ட் இண்டீஸ் அணி, டெஸ்ட் தொடரை இழந்த நிலையில், தற்போது ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. முதல் போட்டியில் இந்தியாவும், 3-வது போட்டியில் வெஸ்ட் இண்டீசும் வெற்றிபெற்றன. 2-வது போட்டி சமனில் முடிவடைந்தது. இந்தத் தொடரில், ஹாட்ரிக்‍ சதம் அடித்த கேப்டன் விராட் கோலி, இந்தியாவின் 47 ஆண்டுகால ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில், தொடர்ச்சியாக சதம் அடித்த முதல் வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

இந்நிலையில், இவ்விரு அணிகள் மோதும் 4-வது ஒருநாள் போட்டி, மும்பையில் இன்று நடைபெறவுள்ளது. தொடரில் முன்னிலை பெறும் முனைப்புடன் இரு அணிகளும் கடுமையாக போராடும் என்பதால், இப்போட்டி, விறுவிறுப்பாக இருக்‍கும் என எதிர்பார்க்‍கப்படுகிறது. மேலும், இந்த ஆட்டத்திலும் விராட் கோலி சதம் அடித்து, இலங்கை வீரர் சங்ககராவின் சாதனையை சமன் செய்வார் என்ற நம்பிக்‍கையில் ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர். இப்போட்டி மதியம் 1.30 மணிக்‍கு தொடங்குகிறது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00