வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டி- 8 விக்‍கெட் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி

Oct 22 2018 12:53PM
எழுத்தின் அளவு: அ + அ -

வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில், இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

அசாம் மாநிலம் கவுகாத்தியில் நேற்று நடைபெற்ற இப்போட்டியில், டாஸ் வென்ற இந்திய அணி, முதலில் பந்துவீச்சு தேர்வு செய்தது. இதனையடுத்து பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி, 50 ஓவர்களில் 8 விக்கெட்கள் இழப்பிற்கு 322 ரன்கள் குவித்தது. அந்த அணியின் Hetmyer அதிகபட்சமாக 106 ரன்கள் எடுத்தார். இந்தியா தரப்பில், Yuzvendra Chahal 3 விக்‍கெட்டுகளை கைப்பற்றினார்.

பின்னர் 323 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. கேப்டன் விராட் கோலியும், ரோகித் ஷர்மாவும் அதிரடியாக விளையாடி சதம் அடித்தனர். இதனால் இந்திய அணி 42 புள்ளி ஒரு ஓவரிலேயே 326 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. ரோகித் ஷர்மா 152 ரன்களும், கேப்டன் விராட் கோலி 140 ரன்களும் எடுத்து அணியை வெற்றிப்பாதைக்‍கு அழைத்துச் சென்றனர்.

இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை, இந்திய அணி 1-க்‍கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. இவ்விரு அணிகளுக்‍கு இடையிலான 2-வது ஒருநாள் போட்டி, வரும் 24-ஆம் தேதி, விசாகப்பட்டினத்தில் நடைபெறவுள்ளது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00