இந்திய கிரிக்கெட் அணி முன்னாள் கேப்டன் அஜித் வடேகர் காலமானார் : பிரதமர் மோடி, கிரிக்கெட் பிரபலங்கள் பலர் இரங்கல்

Aug 16 2018 11:10AM
எழுத்தின் அளவு: அ + அ -

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் அஜித் வடேகர் மும்பையில் காலமானார், இவரது மறைவுக்கு பிரதமர் மோடி, கிரிக்கெட் பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இங்கிலாந்து மற்றும் மேற்கு இந்திய அணிகளை அவர்களது சொந்த மண்ணில் வீழ்த்தி இந்திய அணிக்கு வரலாற்று சிறப்பு மிக்க வெற்றிகளை தேடி தந்தவர் அஜித் வடேகர். பட்டோடிக்கு பிறகு 1970-களில் இந்திய அணியின் கேப்டனாக பொறுபேற்ற வடேகர் அணியை திறம்பட வழிநடத்தி சென்றதோடு அல்லாமல், சிறந்த இடது கை பேட்ஸ்மேன் மற்றும் ஸ்லிப் பீல்டராகவும் வலம் வந்தவர்.

1964-ம் ஆண்டு இந்திய அணியில் அறிமுகமான இவர், 37 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 1 சதம் உள்பட 14 அரை சதங்களுடன் 2113 ரன்களை குவித்துள்ளார். 1974-ம் ஆண்டு கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு இந்திய அணியின் பயிற்சியாளர், மேனேஜர், தேர்வுக்குழு தலைவர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளையும் வடேகர் வகித்துள்ளார். இந்தியாவின் நான்காவது உயரிய விருதன பத்மஸ்ரீ விருது, அர்ஜூனா விருது, வாழ்நாள் சாதனையாளர் விருது உள்பட பல விருதுகளை அஜித் வடேகர் பெற்றுள்ளார்.

இந்நிலையில், சமீபகாலமாக உடல் நலம் பாதிக்கப்பட்டு மும்பை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இவர், நேற்று காலமானார். இவரது மறைவுக்கு பிரதமர் மோடி மற்றும் கிரிக்கெட் பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00