உலகக்கோப்பையுடன் தாயகம் திரும்பிய ஃபிரான்ஸ் வீரர்கள் : லட்சக்கணக்கான மக்கள் ஆரவாரத்துடன் எழுச்சிமிகு வரவேற்பு - ஃபிரான்ஸ் அதிபருடன் கால்பந்து வீரர்கள் குதூகலம்

Jul 17 2018 11:55AM
எழுத்தின் அளவு: அ + அ -

உலகக் கோப்பை கால்பந்துப் போட்டியில் வெற்றிபெற்று, கோப்பையுடன் நாடு திரும்பிய ஃபிரான்ஸ் அணி வீரர்களுக்கு அந்நாட்டு மக்கள் உற்சாக வரவேற்பளித்தனர்.

ரஷ்யாவில் நடைபெற்ற உலகக்கோப்பை கால்பந்து போட்டியின் இறுதி ஆட்டத்தில், குரோஷியா அணியை வீழ்த்தி, இரண்டாவது முறையாக ஃபிரான்ஸ் அணி கோப்பையை கைப்பற்றியது. இதை அந்நாட்டு மக்‍கள் உற்சாகமாகக்‍ கொண்டாடி வரும் நிலையில், வெற்றிக்‍ கோப்பையுடன் நாடு திரும்பிய ஃபிரான்ஸ் வீரர்களை வரவேற்கும் விதமாக, விமானத்தின் இருபுறமும் தண்ணீர் பீய்ச்சி அடிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து வீரர்களுக்கு சிவப்புக் கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து, தலைநகர் பாரிஸ் நகரில், உலக்கோப்பையுடன் திறந்த வாகனத்தில் வந்த வீரர்களை, சாலையில் திரண்டிருந்த லட்சக்கணக்கான ரசிகர்கள் உற்சாகத்துடன் வரவேற்றனர்.

கோப்பையுடன் பாரிஸ் நகரில் அமைந்துள்ள அதிபர் மாளிகைக்கு வருகை தந்த கால்பந்து வீரர்களை, அதிபர் இம்மானுவேல் மேக்ரான் மற்றும் அமைச்சர்கள் உற்சாகமாக வரவேற்று, வாழ்த்து தெரிவித்தனர். இதனைத்தொடர்ந்து, அதிபருடன், கால்பந்து வீரர்கள் ஆரவாரத்துடன் குழு புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00