உலகக் கோப்பை கால்பந்து இறுதிப் போட்டிக்‍கு முதல்முறையாக முன்னேறியது குரோஷியா - அரையிறுதியில் கடுமையாகப் போராடி தோற்றுப்போனது இங்கிலாந்து

Jul 12 2018 5:00PM
எழுத்தின் அளவு: அ + அ -

உலகக் கோப்பை கால்பந்து தொடரின் இரண்டாவது அரையிறுதி ஆட்டத்தில், இங்கிலாந்தை 2-க்‍கு ஒன்று என்ற கோல் கணக்கில் வென்ற குரோஷியா, முதல் முறையாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.

ரஷ்யாவில் நடைபெற்று வரும் உலக கோப்பை கால்பந்து தொடரின் அரையிறுதியில், குரோஷியா, இங்கிலாந்து அணிகள் மோதின. மாஸ்கோவில் நடைபெற்ற ஆட்டத்தின் 5-வது நிமிடத்தில் இங்கிலாந்தின் Trippier முதல் கோல் அடித்தார். 68-வது நிமிடத்தில் குரோஷியாவின் Perisic ஒரு கோலடித்து பதிலடி தந்தார். ஆட்டநேர முடிவில் போட்டி 1-1 என சமநிலையில் இருந்தது.

பின்னர் இரு அணியினருக்கும் கூடுதல் நேரம் வழங்கப்பட்டது. இதன் 109-வது நிமிடத்தில் குரோஷியாவின் Mandzukic ஒரு கோலடித்தார். இதன்பின்னர், இங்கிலாந்து அணியினரால் கடைசி வரை கோல் அடிக்க முடியவில்லை. முடிவில் குரோஷிய அணி, 2-க்‍கு ஒன்று என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று, முதன்முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

வரும் 15-ம் தேதி நடைபெறும் இறுதிப் போட்டியில், குரோஷியா - பிரான்ஸ் அணிகள் மோதுகின்றன.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00