உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் அரையிறுதி ஆட்டங்கள் தொடக்கம் : முதல் போட்டியில் பிரான்ஸ்-பெல்ஜியம் அணிகள் பலப்பரீட்சை
Jul 10 2018 11:01AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ரஷ்யாவில் இன்று நடைபெறும் உலக கோப்பை கால்பந்து போட்டியின் முதல் அரையிறுதி ஆட்டத்தில், ஃபிரான்ஸ்-பெல்ஜியம் அணிகள் மோதுகின்றன.
உலக கோப்பை கால்பந்து போட்டி ரஷியாவில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டி தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. 1966-ம் ஆண்டு சாம்பியனான இங்கிலாந்து, 1998-ம் ஆண்டு உலக கோப்பையை வென்ற பிரான்ஸ், கோப்பையை வெல்லாத பெல்ஜியம், குரோஷியா ஆகிய 4 அணிகள் அரை இறுதிக்கு தகுதி பெற்றுள்ளன. முதல் அரை இறுதி ஆட்டம் இன்று இரவு 11.30 மணிக்கு நடைபெறுகிறது. இதில் பிரான்ஸ்-பெல்ஜியம் அணிகள் மோதுகின்றன. இரு அணிகளும் சமபலம் பொருந்தியவை என்பதால் இந்த ஆட்டம் மிகவும் விறுவிறுப்பாக இருக்கும் என ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. பிரான்ஸ் அணி 3-வது முறையாக இறுதிப் போட்டிக்குள் நுழையும் ஆர்வத்தில் உள்ளது. அந்த அணி 1998, 2006 ஆகிய ஆண்டுகளில் தகுதி பெற்று இருந்தது. பெல்ஜியம் அணி முதல் முறையாக இறுதிப் போட்டிக்குள் நுழையும் முனைப்பில் உள்ளது. இரு அணிகளும் இன்று மோத இருப்பது 74-வது போட்டியாகும். இதுவரை நடந்த 73 ஆட்டத்தில் பிரான்ஸ் 24 போட்டிகளிலும், பெல்ஜியம் 30 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன. மேலும், உலக கோப்பையில் இரு அணிகளும் 32 ஆண்டுகளுக்கு பிறகு மோத இருக்கின்றன.