இங்கிலாந்துக்‍கு எதிரான 20 ஓவர் போட்டித் தொடரை கைப்பற்றியது இந்தியா : ரோஹித் சர்மா அபார சதம் அடித்துபுதிய சாதனை

Jul 9 2018 12:45PM
எழுத்தின் அளவு: அ + அ -
இங்கிலாந்துக்‍கு எதிரான 3-வது டி20 போட்டியில், 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி அபாரமாக வெற்றிபெற்று, தொடரையும் கைப்பற்றியது.

இந்தியா - இங்கிலாந்து இடையிலான 3-வது மற்றும் கடைசி டி20 போட்டி, பிரிஸ்டோலில் நேற்று நடைபெற்றது. இதில்,டாஸ் வென்ற இந்திய அணி, முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இங்கிலாந்து அணியின் ஜேசன் ராய், ஜோஸ் பட்லர் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கி, அதிரடியாக விளையாடி ரன்கள் சேர்த்தனர். பட்லர் 34 ரன்களும், ராய் 67 ரன்களும் குவித்து ஆட்டமிழந்தனர். நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு, இங்கிலாந்து அணி 198 ரன்கள் குவித்தது. இந்தியா சார்பில் ஹர்திக் பாண்டியா 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

இதையடுத்து, 199 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களமிறங்கியது. ஷிகர் தவான் விரைவில் அவுட்டாகி அதிர்ச்சி அளித்த நிலையில், மறுபுறம், ரோகித் சர்மா பொறுப்புடன் விளையாடி, டி20 போட்டிகளில் மூன்றாவது சதத்தை நிறைவு செய்தார். இதனால், இந்திய அணி 18 புள்ளி 4 ஓவரில் 201 ரன்கள் எடுத்து, 7 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றிபெற்றது. இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை, 2-1 என கைப்பற்றி, இந்திய அணி அசத்தியது.

இவ்விரு அணிகளுக்‍கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி, Nottingham நகரில், வரும் 12-ஆம் தேதி நடைபெறவுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
 • MAKKALODU MAKKAL SELVAR

  Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

 • ARAM PESA VIRUMBU

  Mon - Fri : 18:00

 • MANNERGAL

  Sat : 21:00

 • ULAGAM MARUPAKKAM

  Sun : 12:30

 • AALAYAMUM AARADHANAYUM

  Sun : 07:30

 • KALLADATHU ULAGALAVU

  Sat : 17:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 2926.00 Rs. 3129.00
மும்பை Rs. 2946.00 Rs. 3120.00
டெல்லி Rs. 2959.00 Rs. 3134.00
கொல்கத்தா Rs. 2959.00 Rs. 3131.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 40.00 Rs. 40000.00
மும்பை Rs. 40.00 Rs. 40000.00
டெல்லி Rs. 40.00 Rs. 40000.00
கொல்கத்தா Rs. 40.00 Rs. 40000.00