அயர்லாந்துக்கு எதிரான 2-வது 20 ஓவர் கிரிக்‍கெட் போட்டி : 143 ரன்கள் வித்தியசாத்தில் இந்தியா அணி வெற்றி

Jun 30 2018 2:48PM
எழுத்தின் அளவு: அ + அ -

அயர்லாந்துக்கு எதிரான 2வது மற்றும் கடைசி 20 ஓவர் கிரிக்‍கெட் போட்டியில் 143 ரன்கள் வித்தியசாத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி தொடரை கைப்பற்றியது.

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் பங்கேற்க இந்திய அணி திட்டமிட்டுள்ளது. இந்த போட்டிக்‍கு முன்னதாக இங்கிலாந்தின் அண்டை நாடான அயர்லாந்தில் இந்திய அணி தற்போது சுற்றுப் பயணம் செய்து வருகிறது. இரண்டு 20 ஓவர் போட்டிகளைக்‍ கொண்ட தொடரின் முதல் ஆட்டத்தில் இந்தியா ஏற்கெனவே வெற்றிபெற்ற நிலையில், 2வது மற்றும் கடைசி போட்டி நேற்று நடைபெற்றது. தலைநகர் டப்ளினில் நடைபெற்ற இந்த போட்டியில், இந்திய அணி வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். அதிகபட்சமாக லோகேஷ் ராகுல் 70 ரன்களும், ரெய்னா 69 ரன்களும், பான்டியா 32 ரன்களும் எடுத்தனர். இதனால், 20 ஓவர் முடிவில் இந்தியா 213 ரன்கள் எடுத்தது. இதையடுத்து, 214 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் அயர்லாந்து அணி களம் இறங்கியது. ஆனால், இந்திய அணி வீரர்களின் பந்து வீச்சை எதிர்கொள்ள முடியாமல், அந்த அணியின் வீரர்கள் விக்கெட் அடுத்தது சரிந்தது. 12 ஓவரிலேயே 70 ரன்களுக்குள் அயர்லாந்து அணி சுருண்டது. இதனால், 2வது மற்றும் கடைசி 20 ஓவர் கிரிக்‍கெட் போட்டி 143 ரன்கள் வித்தியசாத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி தொடரை கைப்பற்றியது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00