ரஷ்யாவில் நடைபெற்று வரும் உலகக்‍கோப்பை கால்பந்து போட்டி - நாக் - அவுட் சுற்றில் உருகுவே - போர்ச்சுக்கல் மற்றும் பிரான்ஸ் - ஆர்ஜென்டீனா அணிகள் இன்று பலப்பரீட்சை

Jun 30 2018 12:27PM
எழுத்தின் அளவு: அ + அ -

ரஷ்யாவில் நடைபெற்று வரும் உலகக்‍கோப்பை கால்பந்து போட்டியை உலகம் முழுவதும் உள்ள கால்பந்து ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில், இன்று நடைபெற உள்ள நாக் - அவுட் சுற்றில் உருகுவே - போர்ச்சுகல் அணிகள் மற்றும் ஃபிரான்ஸ் - ஆர்ஜென்டினா அணிகள் மோத உள்ளன.

ரஷ்யாவில் 21-வது உலகக்கோப்பை கால்பந்து திருவிழா விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 32 நாடுகள் கலந்துகொண்ட இந்த தொடரில், நேற்று முன்தினத்துடன் லீக் சுற்று ஆட்டங்கள் நிறைவடைந்தன. முதல் சுற்று லீக் ஆட்டங்களின் அடிப்படையில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களைப் பிடித்த அணிகள் நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறியுள்ளன. ரசிகர்கள் ஆவலுடன் எதிர்நோக்‍கியுள்ள பரபரப்பான நாக்-அவுட் சுற்று ஆட்டங்கள், இன்று முதல் தொடங்குகின்றன. முதல் ஆட்டத்தில், உருகுவே - போர்ச்சுகல், ஃபிரான்ஸ் - ஆர்ஜென்டினா அணிகள் மோத உள்ளன.

இதேபோல், நாளை மறுநாள் நடைபெறும் மற்றொரு நாக்-அவுட் சுற்று ஆட்டத்தில், பிரேசில் - மெக்சிகோ அணிகளும், பெல்ஜியம் - ஜப்பான் அணிகளும் பலப்பரீட்சை நடத்த உள்ளன. இதில் வெற்றி பெறும் அணிகள் காலிறுதிக்கு முன்னேற உள்ளன.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00