நைஜீரியாவை வீழ்த்தி அர்ஜெண்டினா நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேற்றம் : ஐஸ்லாந்தை போட்டியில் இருந்து வெளியேற்றிய குரோஷியா - டென்மார்க், ஃபிரான்ஸ் இடையேயான போட்டி டிரா

Jun 27 2018 10:44AM
எழுத்தின் அளவு: அ + அ -

ரஷ்யாவில் நடைபெற்றுவரும் உலகக்கோப்பை கால்பந்து தொடரில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில், நைஜீரியாவை, வீழ்த்தி ​ஆர்ஜெண்டினா நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேறியது.

உலகக்கோப்பை கால்பந்து போட்டிகள் ரஷ்யாவில் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற லீக்‍ போட்டியில், 'டி' பிரிவில் இடம்பிடித்துள்ள ஆர்ஜெண்டினா-நைஜீரியா அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இரு அணிகளும் இந்த போட்டியில் வெற்றிபெற வேண்டும் என்ற கட்டாயத்துடன் களமிறங்கின. 14-வது நிமிடத்தில் ஆர்ஜெண்டினா அணிக்கு கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்தி, மெஸ்சி கோல் அடித்து அசத்தினார். அதன்பின், முதல் பாதிநேர ஆட்டத்தில் ஆர்ஜெண்டினா 1-0 என முன்னிலை வகித்தது. தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது பாதிநேர ஆட்டத்தின் 51-வது நிமிடத்தில் நைஜீரியா அணிக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. அந்த வாய்ப்பில் நைஜீரியா வீரர் விக்டர் மோசஸ் கோல் அடித்தார். இதனால் ஆட்டம் 1-1 என சமனானது. 87-வது நிமிடத்தில் அர்ஜெண்டினா வீரர் மார்கஸ் ரோஜோ கோல் அடித்தார். இதனால் அர்ஜெண்டினா அணி 2-1 என முன்னிலை பெற்று வெற்றிபெற்றது. 'டி' பிரிவில் இரண்டாவது இடத்தை பிடித்த ஆர்ஜெண்டினா நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேறியது.

நேற்று நடைபெற்ற மற்றொரு போட்டியில், 'டி' பிரிவில் இடம்பிடித்துள்ள குரோசியா-ஐஸ்லாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின. குரோசியா அணி விளையாடிய இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்றதால் ஏற்கனவே நாக்-அவுட் சுற்றுக்கு தகுதி பெற்றிருந்தது. ஐஸ்லாந்து அணி இந்த போட்டியில் வென்றாக வேண்டும் என்ற கட்டாயத்துடன் களமிறங்கியது. முதல் பாதிநேர ஆட்டத்தில் இரு அணியினரும் கோல் அடிக்கவில்லை.

இரண்டாவது பாதிநேர ஆட்டத்தின் 53-வது நிமிடத்தில் குரோசியா வீரர் மிலான் படேல்ஜ் கோல் அடித்தார். அதன்பின் 76-வது நிமிடத்தில் ஐஸ்லாந்து அணிக்கு ஒரு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி, கைல்பி சிகுர்ட்சன் கோல் அடித்தார். இதனால் இரு அணியும் தலா ஒரு கோல் அடித்து சமநிலையில் இருந்தது. 90-வது நிமிடத்தில் குரோசியா அணியின் இவான் பெரிசிக் கோல் அடித்ததையடுத்து, குரோசியா 2-1 என முன்னிலைபெற்ற வெற்றிபெற்றது. இதனால் ஐஸ்லாந்து அணி தொடரைவிட்டு வெளியேறியது.

மற்றொரு போட்டியில், 'சி' பிரிவில் இடம்பெற்றுள்ள டென்மார்க், ஃபிரான்ஸ் அணிகள் மோதின. இப்போட்டி தொடங்கியதில் இருந்தே இரு அணி வீரர்களும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இரு அணி வீரர்களுக்‍கு பலமுறை கோல் போடும் வாய்ப்பு கிடைத்தும் அனைத்து முயற்சிகளும் தோல்வியில் முடிந்தன. ஆட்டத்தின் இரு பாதியிலும் எந்த அணியும் கோல் அடிக்க முடியாமல் திணறின. இரு அணி வீரர்களும் கோல் அடிக்‍காததால், இந்த போட்டி டிராவில் முடிந்தது. இதனையடுத்து, இரு அணிக்கும் தலா ஒரு புள்ளிகள் வழங்கப்பட்டது. 'சி' பிரிவு புள்ளிப்பட்டியலில் டென்மார்க், ஃபிரான்ஸ் அணிகள் முதல் இரண்டு இடத்தை பிடித்து நாக்-அவுட் சுற்றுக்கு தகுதிப்பெற்றன.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00