உலகக்‍கோப்பை கால்பந்துபோட்டி லீக்‍ ஆட்டங்கள் : பனமாவை தோற்கடித்து இங்கிலாந்து அணி அடுத்த சுற்றுக்‍கு முன்னேற்றம் - போலந்தை தோற்கடித்தது கொலம்பியா - டிராவில் முடிந்தது ஜப்பான் - செனகல் ​அணிகளுக்கு இடையேயான ஆட்டம்

Jun 25 2018 1:31PM
எழுத்தின் அளவு: அ + அ -

உலகக்‍கோப்பை கால்பந்துபோட்டியில், நேற்று நடைபெற்ற லீக்‍ போட்டியில், பனமாவை தோற்கடித்து இங்கிலாந்து அணி அடுத்த சுற்றுக்‍கு முன்னேறியது. மற்றோரு போட்டியில் போலந்து அணியை 3-க்‍கு பூஜ்ஜியம் என்ற கணக்‍கில் கொலம்பியா தோற்கடித்தது. ஜப்பான் - செனகல் அணிகளுக்‍கு இடையேயான ஆட்டம் டிராவில் முடிவடைந்தது.

ரஷ்யாவில் நடைபெற்று வரும் உலகக்‍கோப்பை கால்பந்துப்போட்டியில், தற்போது விறுவிறுப்பான லீக்‍ ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன. ஒவ்வொரு அணியும் நாக்‍-அவுட் சுற்றுக்‍கு முன்னேறும் முனைப்பில் தீவிரம் காட்டி வருகின்றன. கசான் நகரில் நேற்று இரவு 11.30 மணிக்‍கு நடைபெற்ற "H" பிரிவு லீக்‍ ஆட்டம் ஒன்றில், கொலம்பியா - போலந்து அணிகள் மோதின. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்தப் போட்டியில், தொடக்‍க முதலே அதிரடியாக விளையாடிய கொலம்பியா, 40-வது நிமிடத்தில் கோல் அடித்து முதல் பாதி ஆட்டத்தில் முன்னிலை பெற்றது. மறுபாதி ஆட்டத்திலும் ஆதிக்‍கம் செலுத்திய கொலம்பியா, 70 மற்றும் 75-வது நிமிடங்களில் அடுத்தடுத்து கோல் அடித்து அசத்தியது. இறுதிவரை போலந்து அணியால் கோல் அடிக்‍க முடியாததால், கொலம்பியா அணி 3-க்‍கு பூஜ்ஜியம் என்ற கோல் கணக்‍கில் வெற்றிபெற்று, அடுத்த சுற்றுக்‍கான வாய்ப்பை தக்‍க வைத்துக்‍கொண்டது.

எகடரின்பர்க்‍ நகரில் நேற்றிரவு 8.30 மணிக்‍கு நடைபெற்ற "H" பிரிவின் மற்றொரு ஆட்டத்தில், ஜப்பான் - செனகல் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இரு அணிகளும் சம பலத்துடன் ஆக்‍ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால், முதல் பாதி ஆட்டத்தில் தலா ஒரு கோல் அடித்து சமநிலையில் இருந்தன. மறுபாதி ஆட்டத்திலும் இரு அணிகளும் தொடர்ந்து ஆதிக்‍கம் செலுத்தியதால், 71-வது நிமிடத்தில் செனகல் அணி ஒரு கோல் அடிக்‍க, 78-வது நிமிடத்தில் ஜப்பானும் பதில் கோல் அடித்து மிரட்டியது. இதனால் ஆட்ட நேர முடிவில் 2-க்‍கு 2 என இப்போட்டி சமனில் முடிந்தது. எனினும், இரு அணிகளும் ஏற்கெனவே தலா ஒரு போட்டியில் வெற்றிபெற்றுள்ளதால், 4 புள்ளிகளுடன் முதல் இரு இடங்களை தக்‍கவைத்துக்‍கொண்டன.

முன்னதாக மாலை 5.30 மணிக்‍கு, நிஸ்னி நோகொராட் நகரில் நடைபெற்ற "G" பிரிவு லீக்‍ ஆட்டம் ஒன்றில், பலம்வாய்ந்த இங்கிலாந்து அணியை, பனாமா அணி எதிர்கொண்டது. போட்டி தொடங்கிய 8 நிமிடத்திலேயே கோல் அடித்த இங்கிலாந்து, 22, 36, 40, 45 என அடுத்தடுத்த நிமிடங்களில் கோல்மழை பொழிந்து எதிராணியை திணறடித்தது. இதனால் முதல் பாதி ஆட்டத்தில் 5-க்‍கு பூஜ்ஜியம் என இங்கிலாந்து அணி முன்னிலை பெற்றது. மறுபாதி ஆட்டத்திலும் ஆதிக்‍கம் செலுத்திய இங்கிலாந்து அணி, 62-வது நிமிடத்தில் மேலும் ஒருகோல் அடித்தது. யாரும் எதிர்பாராத வகையில், 78-வது நிமிடத்தில் பனாமா அணி கோல் அடித்து ஆறுதல் அடைந்தது. ஆட்டநேர முடிவில் 6-க்‍கு ஒன்று என்ற கோல் கணக்‍கில் இங்கிலாந்து அணி அபாரமாக வெற்றிபெற்று, நாக்‍-அவுட் சுற்றுக்‍கு முன்னேறியது.

உலகக்‍கோப்பை கால்பந்துப்போட்டியில், இன்று "A" மற்றும் "B" பிரிவில் இரண்டு லீக்‍ ஆட்டங்கள் நடைபெறவுள்ளன. Volgograd நகரில் இரவு 7.30 மணிக்‍கு நடைபெறவுள்ள "A" பிரிவுக்‍கான முதல் போட்டியில் சவூதி அரேபியா - எகிப்தையும், Samara நகரில் இரவு 7.30 மணிக்‍கு நடைபெறவுள்ள 2-வது போட்டியில் ரஷ்யா - உருகுவே அணிகளும் மோதுகின்றன. இரவு 11.30 மணிக்‍கு Mordovia நகரில் நடைபெறவுள்ள "B" பிரிவுக்‍கான முதல் லீக்‍ போட்டியில், ஈரான் - போர்ச்சுக்‍கல் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. Kaliningrad நகரில் இரவு 11.30 மணிக்‍கு நடைபெறவுள்ள மற்றொரு போட்டியில் ஸ்பெயின் - மொராக்கோ அணிகள் மோதுகின்றன.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00