உலகக்கோப்பை கால்பந்து திருவிழா : பெல்ஜியம், மெக்சிகோ, ஜெர்மனி ஆகிய அணிகள் வெற்றி பெற்று, அடுத்த சுற்றுக்கு முன்னேற்றம்

Jun 24 2018 1:15PM
எழுத்தின் அளவு: அ + அ -

உலகக்கோப்பை கால்பந்து தொடரின் 10-வது நாளான நேற்று நடைபெற்ற மூன்று போட்டிகளில், பெல்ஜியம், மெக்சிகோ, ஜெர்மனி ஆகிய அணிகள் வெற்றி பெற்று, அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளன.

உலக கோப்பை கால்பந்து தொடர் போட்டிகள் ரஷியாவில் நடைபெற்று வருகின்றன. நேற்று நடைபெற்ற முதல் லீக் ஆட்டத்தில் ஜீ பிரிவில் இடம்பிடித்துள்ள பெல்ஜியம் - துனிசியா அணிகள் மோதின. பெல்ஜியம் அணிக்கு போட்டி தொடங்கிய 6வது நிமிடமே ஒரு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. அதில் அந்த அணியின் கேப்டன் ஈடன் ஹசார்ட் கோல் அடித்தார். அதன்பின் ரொமெலோ லகாகு கோல் அடித்தார். அதைத்தொடர்ந்து 18-வது நிமிடத்தில் துனிசியா வீரர் டைலன் புரோன் ஒரு கோல் அடித்தார். முதல் பாதிநேர ஆட்டத்தில் கூடுதலாக வழங்கப்பட்ட நேரத்தில் பெல்ஜியம் விரர் ரொமெலோ லகாகு மீண்டும் கோல் அடித்தார். மேலும், அந்த அணியின் கேப்டனும் கோல் அடித்தார். பரபரப்பான இந்த ஆட்டத்தின் இறுதியில், பெல்ஜியம் அணி 5-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

இரண்டாவது போட்டியில், "F" பிரிவில் இடம் பிடித்துள்ள மெக்சிகோ மற்றும் தென் கொரியா அணிகள் மோதின. போட்டி தொடங்கியதில் இருந்து மெக்சிகோ அணி வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். அந்த அணியின் வீரர்களான கார்லஸ் வெலா, ஜேவியர் ஹெமாண்டஸ் ஆகியோர் தலா ஒரு கோல் அடித்தனர். இதனால், ஆட்ட நேர முடிவில் மெக்சிகோ அணி 2-0 என முன்னிலையில் இருந்தது. இதையடுத்து, கூடுதலாக வழங்கப்பட்ட நேரத்தில் தென் கொரியா அணி ஒரு கோல் அடித்தார். ஆட்டத்தின் இறுதியில், மெக்சிகோ அணி 2-1 என்ற கோல் கணக்கில் தென் கொரியா அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.

உலகக் கோப்பை கால்பந்து போட்டியில், Sochi நகரில் நேற்றிரவு 11.30 மணிக்‍கு நடைபெற்ற ஆட்டத்தில், "F" பிரிவில் இடம் பிடித்துள்ள நடப்பு சாம்பியன் ஜெர்மனி மற்றும் ஸ்வீடன் அணிகள் மோதின. முதல் பாதியில் ஸ்வீடன் அணியின் ஒலா டொல்வானன் 32-வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்து தனது அணியை முன்னிலைப் படுத்தினார். இரண்டாவது பாதியின் 48-வது நிமிடத்தில் ஜெர்மனி அணியின் மார்கோ ரூயசும், பரபரப்பான கூடுதல் நேரத்தின் 95-வது நிமிடத்தில் டோனி குருசும் ஒரு கோல் அடித்தனர். இதனால் ஜெர்மனி அணி 2-க்‍கு 1 என்ற கோல் கணக்கில் த்ரில்​வெற்றிபெற்று, அடுத்த சுற்றுக்குள் நுழையும் வாய்ப்பையும் தக்‍கவைத்துக்கொண்டது.

உலகக்கோப்பை கால்பந்து தொடரின் 11-வது நாளான இன்று, "ஜி" பிரிவில் இடம்பெற்றுள்ள இங்கிலாந்து - பனாமா, "H" பிரிவில் இடம்பெற்றுள்ள ஜப்பான் மற்றும் செனகல், போலந்து மற்றும் கொலாம்பியா ஆகிய அணிகள் மோத உள்ளன.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00