ரஷ்யாவில் நடைபெற்று வரும் உலகக்‍கோப்பை கால்பந்து போட்டி : லீக்‍ ஆட்டங்களில், ஜப்பான், செனகல், ரஷ்யா அணிகள் வெற்றி

Jun 20 2018 1:27PM
எழுத்தின் அளவு: அ + அ -

உலகக்‍கோப்பை கால்பந்து போட்டியின் லீக்‍ ஆட்டங்களில், ஜப்பான், செனகல், ரஷ்யா அணிகள் வெற்றிபெற்றன.

உலகக்‍கோப்பை கால்பந்து போட்டி ரஷ்யாவில் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற லீக்‍ ஆட்டத்தின் முதல் போட்டியில், தொடங்கிய ஆட்டத்தில் கொலம்பியா - ஜப்பான் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. ஆட்டத்தின் 3-வது நிமிடத்தில் ஜப்பானுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. கொலம்பியா வீரர் சான்செஸ் மொரானோவுக்‍கு ரெட்கார்டு வழங்கப்பட்டு வெளியேற்றப்பட்டார். அப்போது, பெனால்டி வாய்ப்பு கொடுக்கப்பட்டது. இதை பயன்படுத்தி ஷின்ஜி கவாஜா கோல் அடித்தார். இதனால் 6-வது நிமிடத்திலேயே ஜப்பான் 1-0 என முன்னிலைப் பெற்றது. ஆட்டத்தின் 39-வது நிமிடத்தில் கொலம்பியா அணியின் ஜுயான் பெர்னாண்டோ குயின்டோரோ ப்ரீ ஹிக் வாய்ப்பு பயன்படுத்தில் கோல் அடித்தார். இதனால் முதல்பாதி நேரத்தில் இரு அணிகளும் தலா 1 கோல்களுடன் 1-1 என சமநிலையில் இருந்தது. ஆட்டத்தின் 73-வது நிமிடத்தில் ஜப்பான் வீரர் யுவா ஓசாகா ஒரு கோல் அடிக்க ஜப்பான் 2-1 என வெற்றி பெற்றது.

இதனைத் தொடர்ந்து நடைபெற்ற 2-வது லீக்‍ ஆட்டத்தில், போலந்து மற்றும் செனகல் அணிகள் மோதின. போட்டி தொடங்கியதில் இருந்து இரு அணி வீரர்களும் சிறப்பாக ஆடினர். இதனால் ஆட்டத்தின் முதல் பாதியில் 37வது நிமிடத்தில் செனகல் அணியின் தியாகோ சியோனெக் ஒரு கோல் அடித்து தனது அணியை முன்னிலைப்படுத்தினார். இதனால் ஆட்டத்தின் முதல் பாதியில் செனகல் அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகித்தது. இதைத்தொடர்ந்து, ஆட்டத்தின் 60-வது நிமிடத்தில் எம் பாயே நியாங் ஒரு கோல் அடிக்க, செனகல் அணி 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகித்தது. தொடர்ந்து ஆடிய போலந்து அணி ஆட்டத்தின் இறுதியில் 86 வது நிமிடத்தில் கிரிசோவியக் ஒரு கோல் அடித்தார். இறுதியில், செனகல் அணி போலந்து அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

தொடர்ந்து நடைபெற்ற 3-வது லீக்‍ ஆட்டத்தில், ரஷ்யா மற்றும் எகிப்து அணிகள் மோதின. ஆட்டத்தின் முதல் பாதியில் இரு அணி வீரர்களும் கோல் எதுவும் அடிக்காததால் எந்த அணியும் முன்னிலை பெறவில்லை. இதைத்தொடர்ந்து, ஆட்டத்தின் இரண்டாவது பாதியில் ரஷ்யாவின் அகமது பதே 47வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார். அவரை தொடர்ந்து டெனிஸ் செரிதேவ் 59-வது நிமிடத்தில் மற்றொரு கோல் அடித்தார். தொடர்ந்து, ரஷ்யாவின் அர்டெம் சுபையா 62 வது நிமிடத்தில் ஒரு கோல் அடிக்க ரஷ்யா அணி 3-0 என முன்னிலை வகித்தது. இதையடுத்து, ஆட்டத்தின் 73வது நிமிடத்தில் எகிப்து வீரர் மொமது சலா ஒரு கோல் அடித்தார். இறுதியில், ரஷ்யா அணி எகிப்து அணியை 3-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00