ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி - பேட்மிண்டனில் மலேசியாவை தோற்கடித்து தங்கம் வென்றது இந்தியா

Apr 10 2018 12:31PM
எழுத்தின் அளவு: அ + அ -

ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியின் பேட்மிண்டன் பிரிவில் இந்தியா மலேசியாவை தோற்கடித்து தங்கப்பதக்கம் வென்றது.

ஆஸ்திரேலியாவின் கோல்ட் கோஸ்ட் நகரில் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி நடைபெற்று வருகிறது. போட்டியின் 5-ம் நாளான நேற்று அணிகளுக்‍கான பேட்மிண்டன் போட்டியின் இறுதி ஆட்டம் நடைபெற்றது. இதில் பலம் வாய்ந்த மலேசியாவை இந்தியா சந்தித்தது. இந்தப் போட்டியின் முதல் 3 ஆட்டங்களில் இந்தியா இரண்டில் வெற்றிபெற்று முன்னிலையில் இருந்தது. இதன் தொடர்ச்சியாக நடைபெற்ற ஒற்றையர் ஆட்டத்தில் இந்தியாவின் நட்சத்திர வீராங்கனையான சாய்னா நேவால் மலேசிய வீரங்கனை சோனியா ஷீயை சந்தித்தார். விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் 21-11, 19-21, 21-9 என்ற செட்களில் சோனியாவை தோற்கடித்தார். இதன்மூலம் இந்தப் போட்டியில் இந்தியா 3-1 என்ற கணக்‍கில் மலேசியாவை தோற்கடித்து தங்கப்பதக்‍கம் வென்றது. இது இந்தியாவுக்‍கு 10-வது தங்கமாக அமைந்தது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00