கிராமப்புற ஏழைக்குழந்தைகள் கல்வி தரத்தினை மேம்படுத்தும் வகையில் சென்னையில் மாரத்தான் ஓட்டம் : ஏராளமானோர் பங்கேற்பு

Feb 11 2018 3:49PM
எழுத்தின் அளவு: அ + அ -

கிராமப்புற ஏழைக் குழந்தைகளின் கல்வி தரத்தினை மேம்படுத்தும் வகையில் சென்னையில் நடைபெற்ற மாரத்தான் ஓட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

கிராமப்புற ஏழைக் குழந்தைகளின் கல்வி தரத்தினை மேம்படுத்தும் வகையில் Aid India அமைப்பு நடத்தும் யுரேகா மாரத்தான் ஓட்டம் 8-வது ஆண்டாக சென்னை பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரையில் இன்று நடைபெற்றது. 10 கிலோமீட்டர், 5 கிலோமீட்டர் என இருவேறு பிரிவுகளாக நடத்தப்பட்ட இந்த ஓட்டத்தை திரைப்பட இயக்குநர் சமுத்திரகனி தொடங்கி வைத்தார். இந்த மாரத்தானில் நடிகர் ஆதி மற்றும் ஏராளமான குழந்தைகள், பெண்கள், தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர்.

இதேபோல், புதுச்சேரி அருகே, தமிழக பகுதியில் அமைந்துள்ள ஆரோவில் நகரை, அரவிந்தர் ஆசிரமத்தின் அன்னை என அழைக்‍கப்படும் மிர்ரா, கடந்த 1968-ம் ஆண்டு பிப்ரவரி 28-ம் தேதி உருவாக்‍கினார். இந்த ஆரோவில் நகரம் உருவாக்கப்பட்டதன் உதய தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது. இதனையொட்டி, 11-வது ஆண்டாக இந்த மாரத்தான் போட்டி நடைபெற்றது. மனித ஒற்றுமை, உலக அமைதி, சுற்றுச்சூழல் பாதுகாப்பு போன்றவற்றை வலியுறுத்தி நடைபெற்ற மாரத்தான் போட்டியில் வெளிநாடு மற்றும் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். வெற்றி பெற்றவர்களுக்‍கு பரிசுகள் வழங்கப்பட்டன.

எரிபொருள் சிக்‍கனத்தை வலியுறுத்தி புதுச்சேரி கடற்கரையில் மாரத்தான் போட்டி நடைபெற்றது. ஹிந்துஸ்தான் பெட்ரோலிய நிறுவனம் சார்பில் நடைபெற்ற இந்த விழிப்புணர்வு மாரத்தான் போட்டி, ஏழரை கிலோமீட்டர், 5 கிலோமீட்டர், 3 கிலோமீட்டர் ஆகிய பிரிவுகளில் நடத்தப்பட்டது. இந்த மாரத்தான் ஓட்டத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00