வேகமாக செல்லும் வாகனத்தின் பின்னால் பனிச்சறுக்கிச் செல்வதில் இங்கிலாந்தைச் சேர்ந்த பனிச்சறுக்கு வீரரான கிரஹாம் பெல் புதிய உலக சாதனை

Oct 5 2017 1:11PM
எழுத்தின் அளவு: அ + அ -

இங்கிலாந்தைச் சேர்ந்த பனிச்சறுக்கு வீரரான கிரஹாம் பெல், வேகமாக செல்லும் வாகனத்தின் பின்னால் பனிச்சறுக்கிச் செல்வதில் புதிய உலக சாதனை படைத்துள்ளார்.

இங்கிலாந்தைச் சேர்ந்த முன்னாள் ஒலிம்பிக் பனிச்சறுக்கு வீரரான கிரஹாம் பெல், புதிய உலக சாதனை படைத்து, கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார். வேகமாக செல்லும் வாகனத்தின் பின்னால் கயிற்றைக்கட்டி, அதனை பிடித்துக்கொண்டு, பனிச்சறுக்கிச் செல்வதில் சாதனை நிகழ்த்தினார் கிரஹாம் பெல். இந்த சாதனைக்கு ஜாகுவார் கார் பயன்படுத்தப்பட்டது. ஸ்வீடனின் பனி படர்ந்த பகுதியில் நடைபெற்ற இந்த சாதனையை ஏராளமானோர் கண்டு ரசித்தனர். இதற்கு முன்னர், 113 கிலோமீட்டர் வேகத்தில் சென்ற வாகனத்தின் பின்னால் பனிச்சறுக்கிச் சென்றதே உலக சாதனையாக இருந்தது. இதனை முறியடித்துள்ள கிரஹாம் பெல், 189 கிலோ மீட்டர் வேகத்தில் சென்ற காரின் பின்னால் பனிச்சறுக்கிச் சென்று உலக சாதனைப் படைத்தார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00