இங்கிலாந்துக்கு எதிரான கடைசி இரு டெஸ்ட் போட்டிகளை நடத்த 1 கோடியே 33 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்ய வேண்டும் : பி.சி.சி.ஐ.க்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

Dec 7 2016 9:26PM
எழுத்தின் அளவு: அ + அ -

நிர்வாக சீர்திருத்தம் தொடர்பாக நீதிபதி லோதா குழு பரிந்துரைகளை BCCI முழுமையாக நடைமுறைப்படுத்தவில்லை. இந்த விவகாரம் காரணமாக, அனுமதியின்றி மாநில கிரிக்கெட் சங்கங்களுக்கு பெருமளவில் நிதி அளிக்கக்கூடாது என BCCI-க்கு லோதா குழு கட்டுப்பாடு விதித்துள்ளது. ஆனால், தேவையான நிதி ஒதுக்கீடு செய்யாவிட்டால், இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டிகளை நடத்துவதில் பாதிப்பு ஏற்படும் என BCCI ஏற்கெனவே தெரிவித்திருந்தது. இந்நிலையில், இங்கிலாந்து அணிக்கு எதிரான 4-வது டெஸ்ட் போட்டி மும்பையில் நாளை தொடங்கவிருக்கும் நிலையில், இப்போட்டிக்காகவும், சென்னையில் வரும் 16-ம் தேதி தொடங்கவிருக்கும் 5-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டிக்காகவும், நிதி ஒதுக்கீடு செய்ய அனுமதி அளிக்கும்படி, BCCI, உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம்2 டெஸ்ட் போட்டிகளுக்கு ஒரு கோடியே 33 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்ய BCCI-க்கு அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது. மேலும் மூன்று ஒருநாள் போட்டிகள் மற்றும் டி 20 போட்டிகளுக்கும் தலா 25 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்ய BCCI-க்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00