இங்கிலாந்து அணியின் முன்னணி வேகப்பந்து வீரர் Stuart Broad காயம்காரணமாக 4-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் பங்கேற்பது சந்தேகம்

Dec 4 2016 4:01PM
எழுத்தின் அளவு: அ + அ -

காலில் காயமடைந்துள்ள இங்கிலாந்து அணியின் முன்னணி வேகப்பந்து வீரர் Stuart Broad, இந்தியாவுடான 4-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியிலும் பங்கேற்பது சந்தேகம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி, இந்தியாவுடன் தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இத்தொடரில், விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற 2-வது டெஸ்ட் போட்டியின்போது, இங்கிலாந்து அணியின் முன்னணி வேகப்பந்து வீரர் Stuart Broad காயம் அடைந்தார். கணுக்காலில் ஏற்பட்ட காயத்தால், அவர், மொகாலியில் நடைபெற்ற 3-வது டெஸ்டில் பங்கேற்கவில்லை. இந்த நிலையில், இவ்விரு அணிகளுக்கு இடையே, வரும் 8-ம் தேதி மும்பையில் தொடங்கவுள்ள 4-வது டெஸ்ட் போட்டியிலும், காயமடைந்துள்ள Stuart Broad முழுமையாக பங்கேற்பதில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக பேசிய இங்கிலாந்து அணியின் பயிற்சியாளர் பெய்லிஸ், 4-வது டெஸ்ட் போட்டி தொடங்குவதற்குள் Broad, 100 சதவீதம் உடல் தகுதி பெறுவார் என உறுதியாகக் கூற முடியாது என்றும், பயிற்சியின் போது, அவரது செயல்பாட்டை பார்த்தபிறகுதான் கூறமுடியும் எனவும் தெரிவித்துள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00