நியூசிலாந்து அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில், ரஹானே மற்றும் புஜாரா ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தினால் இந்திய அணி சரிவில் இருந்து மீண்டது

Oct 1 2016 12:37PM
எழுத்தின் அளவு: அ + அ -

கொல்கத்தாவில் நேற்று தொடங்கிய இந்தியா-நியூசிலாந்து ஆகிய அணிகளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி, டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தது. 46 ரன்கள் எடுப்பதற்குள் 3 விக்கெட்டுகள் வீழ்ந்தன. தொடக்க வீரர்கள் தவான் ஒரு ரன்னிலும், விஜய் 9 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். மற்ற முன்னணி வீரர்களும் சொற்ப ரன்களிலேயே ஆட்டமிழந்தனர். எனினும் புஜாராவும் ரஹானேவும் ஜோடி சேர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதனால் அணியின் ரன் எண்ணிக்கை உயர்ந்தது. புஜாரா 87 ரன்களும் ரஹானே 77 ரன்களும் எடுத்தனர். நேற்றைய ஆட்ட நேர இறுதியில் இந்திய அணி 7 விக்கெட் இழப்புக்கு 239 ரன்கள் எடுத்திருந்தது. சஹா 14 ரன்களுடனும் ஜடேஜா ரன் எதுவும் எடுக்காமல் களத்தில் இருந்தனர். இந்நிலையில் இன்று 2-வது நாள் ஆட்டம் நடைபெறவிருக்கிறது. வேகப் பந்துவீச்சுக்கு ஆடுகளம் உதவி செய்யக்கூடும் என்று கருதப்படுவதால், இப்போட்டியும், முடிவை நோக்கிச் செல்கிறது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00