திருச்சியில், அண்ணா பல்கலைக் கழகத்திற்குட்பட்ட கல்லூரிகளுக்கிடையே நடைபெற்ற செஸ் போட்டியில், 32 கல்லூரிகளைச் சேர்ந்த 200 மாணவ-மாணவிகள் ஆர்வமுடன் பங்கேற்பு

Sep 29 2016 6:21PM
எழுத்தின் அளவு: அ + அ -

அண்ணா பல்கலைக் கழகத்திற்குட்பட்ட கல்லூரிகளுக்கு இடையேயான சதுரங்கப் போட்டி திருச்சியில் இன்று தொடங்கியது. 2 நாட்கள் நடைபெறும் இப்போட்டியில் ஆண்கள் பிரிவில் 18 அணியும், பெண்கள் பிரிவில் 14 அணியும் பங்கேற்றுள்ளன. ஸ்விஸ் லீக் முறைப்படி 5 சுற்றுகளாக குழுப் போட்டிகள் நடத்தப்படுகின்றன. போட்டியின் முடிவில் ஆடவர் பிரிவில் தேர்வு செய்யப்படும் 6 பேர் அக்டோபர் 12ம் தேதி சென்னையில் நடைபெறும் அடுத்த சுற்றுப் போட்டியில் பங்கேற்கவுள்ளனர். இதேபோல் பெண்கள் பிரிவில் தேர்வு செய்யப்படுவோர் அக்டோபர் 8ம் தேதி சென்னையில் நடைபெறும் பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான செஸ் போட்டியில் விளையாடுவர். இந்திய பள்ளிகளுக்கு இடையிலான விளையாட்டுக் குழுமம் சார்பில் அக்டோபர் 3ம் தேதி முதல் 5ம் தேதி வரை தெலங்கானா மாநிலம் மகபூப் நகரில் தேசிய அளவிலான மகளிர் வலைபந்து போட்டிகள் நடைபெற உள்ளன. இந்த போட்டியில் தமிழக அணி சார்பாக விளையாட, ராமநாதபுரம், சேலம், சென்னை, அரியலூர், உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த 12 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு பரமக்குடியில் 5 நாட்கள் பயிற்சி முகாம் நடைபெற்று வருகிறது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00