ரியோ ஒலிம்பிக் போட்டியில் 4 தங்கப்பதக்கங்களை அள்ளி குவிந்த இளம் அமெரிக்க வீராங்கனை Simon Biles - தாயகத்தில் உற்சாக வரவேற்பு

Aug 25 2016 8:00AM
எழுத்தின் அளவு: அ + அ -

ரியோ ஒலிம்பிக்கில் 4 தங்கப்பதக்கம் உட்பட 5 பதக்கங்களை வென்று தாயகம் திரும்பிய அமெரிக்க வீராங்கனை Simon Biles-க்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

அண்மையில் நடந்து முடிந்த ரியோ ஒலிம்பிக் போட்டியில், அமெரிக்கா 46 தங்கம், 37 வெள்ளி, 38 வெண்கலம் என மொத்தம் 121 பதக்கங்களுடன் முதலிடம் பிடித்தது. இப்போட்டியில், அந்நாட்டின் புகழ்பெற்ற ஜிம்னாஸ்டிக் வீராங்கனை Simon Biles 4 தங்கப் பதக்கம் உட்பட 5 பதக்கங்களை குவித்தார். இதன்மூலம், ஜிம்னாஸ்டிக்கில் அதிக தங்கம் வென்ற அமெரிக்க வீராங்கனை என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார். இந்நிலையில், பதக்கங்களுடன் தாயகம் திரும்பிய Simon Biles-க்கு Houston நகரில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. Houston மேயர் Sylvester Turner மற்றும் நூற்றுக்கணக்கான ரசிகர்கள் திரண்டு கரவொலி எழுப்பி வாழ்த்து தெரிவித்தனர். Simon Biles-ஐ கவுரவிக்கும் வகையில், ஆண்டுதோறும் ஆகஸ்ட் 24ம் தேதி Simon Biles தினமாக அதிகாரப்பூர்வமாக கொண்டாடப்படும் என Houston மேயர் அறிவித்தார். தனது ஆதரவு அளித்த அனைவருக்கும் நன்றி தெரிவிப்பதாக Simon Biles குறிப்பிட்டார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00