இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் இடையேயான 2வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி - ஜமைக்காவில் தொடக்கம்

Jul 30 2016 8:14AM
எழுத்தின் அளவு: அ + அ -

இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் இடையேயான 2வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி, ஜமைக்காவில் இன்று தொடங்குகிறது. 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பையில் அசத்திய வெஸ்ட் இண்டீஸின் அல்சாரி ஜோசப் இப்போட்டியில் இடம் பெற்றுள்ளார்.

வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி, 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. ஆன்டிகுவாவில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா, ஒரு இன்னிங்ஸ் 92 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதனைத்தொடர்ந்து 2வது டெஸ்ட் போட்டி, ஜமைக்காவில் உள்ள சபினா பார்க் மைதானத்தில் இன்று தொடங்குகிறது.

இப்போட்டியில் பங்கேற்கும், ஜேசன் ஹோல்டர் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் அணி வீரர்கள் அறிவிக்கப்பட்டனர். இதில், அறிமுக வீரராக 19 வயதாகும் வேகப்பந்து வீச்சாளர் அல்சாரி ஜோசப் களம் இறங்குகிறார். பங்களாதேஷில் நடைபெற்ற 19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் அல்சாரி ஜோசப் சிறப்பாக பந்துவீசி 13 விக்கெட் வீழ்த்தி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00