ஒலிம்பிக் போட்டிக்கான சுடர், ரியோ-டி-ஜெனிரோ நகர் சென்றடைந்தது : பொதுமக்கள் உற்சாகத்துடன் வரவேற்பு

Jul 30 2016 6:55AM
எழுத்தின் அளவு: அ + அ -

ஒலிம்பிக் போட்டிக்கான சுடர், போட்டி நடைபெறவிருக்கும் ரியோ-டி-ஜெனிரோ நகரை சென்றடைந்தது.

உலக நாடுகளின் விளையாட்டுத் திருவிழா என்று சிறப்புடன் அழைக்கப்படும் ஒலிம்பிக் போட்டிகள் ப்ரசில் நாட்டின் ரியோ-டி-ஜெனிரோ நகரில் வருகிற 5-ம் தேதி கோலாகலமாக தொடங்கவிருக்கிறது. இதனை யொட்டி ஒலிம்பிக் சுடர், உலகின் பல்வேறு நாடுகளின் வழியாக எடுத்துச் செல்லப்பட்டது. தற்போது, போட்டி நடைபெறவிருக்கும் ரியோடிஜெனிரோ நகரை சென்றடைந்தபோது பொதுமக்கள் மிகுந்த உற்சாகம் அடைந்தனர். ஒலிம்பிக் சுடர் தங்கள் நகருக்கு வந்திருப்பது தங்களுக்கு மிகவும் பெருமையளிப்பதாக அவர்கள் தெரிவித்தனர். அங்குள்ள தீவுகளான Iiha Bela மற்றும் Angra ஆகிய பகுதிகளுக்கு படகு வழியாக ஒலிம்பிக் சுடர் கொண்டு செல்லப்படுகிறது. மலைப்பகுதிக்கு செல்லும் போது, ப்ரசில் நாட்டின் பிரபல சைக்கிள் பந்தய வீரர் Edivaldo Cruz இதனை கொண்டு செல்லவிருக்கிறார். ப்ரசில் நாட்டின் 20 ஆயிரம் கிலோமீட்டர் பயணம் செய்யும் ஒலிம்பிக் சுடர், பின்னர் போட்டி நடைபெறவிருக்கும் ஒலிம்பிக் நகரை வந்தடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கும் இந்திய ஹாக்கி அணிகள், ரியோடி ஜெனிரோ நகருக்கு நேற்று சென்றடைந்தன.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00