கால்பந்து வீரர் மெஸ்ஸி, டென்னிஸ் வீரர் ஜோகோவிச் ஆகியோரை பின்னுக்கு தள்ளி உலகின் அதிக விற்பனைக்கு உரிய 3-வது விளையாட்டு வீரராக இந்திய கிரிக்கெட் வீரர் விராட்கோலி தேர்வு

May 27 2016 11:04AM
எழுத்தின் அளவு: அ + அ -

பிரபல கால்பந்து வீரர் மெஸ்ஸி, உலகின் முதல் நிலை டென்னிஸ் வீரர் ஜோகோவிச் ஆகியோரை பின்னுக்கு தள்ளி, உலகின் அதிக விற்பனைக்கு உரிய 3-வது விளையாட்டு வீரராக இந்தியாவின் நட்சத்திர கிரிக்கெட் வீரர் விராட்கோலி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

"Sports Pro" என்ற விளையாட்டு பத்திரிக்கை நடத்திய ஆய்வின் முடிவில், உலகின் அதிக விற்பனைக்குரிய விளையாட்டு வீரர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில், NBA கூடைப்பந்து விளையாட்டு வீரர் Stephen Curry முதலிடத்தையும், Juventus' ஃப்ரெஞ்ச் கால்பந்து கிளப்பை சேர்ந்த வீரர் Paul Pogba,2-வது இடத்தையும் பிடித்துள்ளனர். இந்தப் பட்டியலில் இந்தியாவின் நட்சத்திர கிரிக்கெட் வீரரும், டெஸ்ட் அணியின் கேப்டனுமான விராட் கோலி 3ம் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். உலகின் முதல் நிலை டென்னிஸ் வீரரான செர்பியாவின் நோவக் ஜோகோவிச்சுக்கு 23-வது இடமும், பிரபல கால்பந்தாட்ட வீரரான ஆர்ஜென்டினாவின் மெஸ்ஸிக்கு 27-வது இடமும், ஜமைக்காவைச் சேர்ந்த மின்னல் வேக ஓட்டப்பந்தய வீரர் உசேன் போல்ட்டுக்கு 31-வது இடமும் கிடைத்துள்ளது. உலகளவில் பிரபலமான ஜோகோவிச், மெஸ்ஸி மற்றும் உசைன் போல்ட் ஆகியோரை பின்னுக்கு தள்ளி, 3-வது இடத்தை விராட் கோலி பிடித்துள்ளது பெரும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00