ஃப்ரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி : ஆர்ஜென்டினா வீரரை தோற்கடித்ததன் மூலம் ரஃபேல் நடால், கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் தனது 200-வது வெற்றியை பதிவு செய்துள்ளார்

May 27 2016 8:30AM
எழுத்தின் அளவு: அ + அ -

ஃப்ரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியில் ஆர்ஜென்டினா வீரரை தோற்கடித்ததன் மூலம், ஸ்பெயினின் ரஃபேல் நடால், கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில், தனது 200-வது வெற்றியை பதிவு செய்துள்ளார்.

கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான ஃப்ரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டிகள், ஃபிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெற்று வருகின்றன. நேற்று நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் பிரிவு 2-வது சுற்று ஆட்டத்தில், 9 முறை சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்துள்ள ஸ்பெயினின் ரஃபேல் நடால், ஆர்ஜென்டினாவின் Facundo Bagnis-ஐ எதிர்கொண்டார். மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில், 6-3, 6-0, 6-3 என்ற செட்கணக்கில் நடால் மிக எளிதாக வெற்றிபெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

இதன்மூலம், கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் தனது 200-வது வெற்றியை ரஃபேல் நடால் பதிவு செய்துள்ளார். அத்துடன், கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் அதிக வெற்றிகளை குவித்த 8-வது வீரர் என்ற பெருமையையும் அவர் பெற்றுள்ளார். கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் அதிக வெற்றிகளை குவித்த வீரர்கள் பட்டியலில், சுவிட்சர்லாந்தின் ரோஜர் ஃபெடரர் 302 வெற்றிகளுடன் முதலிடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00