நார்வேயில் இளைஞர்களுக்கான குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் கோலாகலமாக தொடங்கின : 71 நாடுகளைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள் பங்கேற்பு

Feb 13 2016 8:28AM
எழுத்தின் அளவு: அ + அ -

நார்வேயில் இளைஞர்களுக்கான குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் கோலாகலமாக தொடங்கியுள்ளன. இதில், 71 நாடுகளைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.

நார்வே நாட்டின் Lillerhammer பகுதியில் 2016-ம் ஆண்டில் இளைஞர்கள் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் தொடங்கியுள்ளன. இதனை ஒலிம்பிக் சங்க தலைவர் பங்கேற்று தொடங்கிவைத்தார். கடந்த 1994ஆம் ஆண்டு நடைபெற்ற குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்ற வீரர்களில் ஒருவரான Lysgardsbakkene ஒலிம்பிக் சுடரை ஏற்றிவைத்தார். இந்த ஒலிம்பிக் போட்டியில் 71 நாடுகளைச் சேர்ந்த ஆயிரத்து 100 விளையாட்டு வீரர், வீராங்கனைகள் போட்டிகளில் பங்கேற்கின்றனர். முதலிடத்தை பிடிப்பவர்களுக்கு 70 தங்கப்பதக்கங்கள் வழங்கப்படவுள்ளன. முன்னதாக தொடக்க விழாவின்போது, பல்வேறு நாடுகளைச் சேர்ந்த போட்டியாளர்கள் தங்கள் நாட்டுக்கொடியினை ஏந்தி அணிவகுப்பு நடத்தினர். கலைநிகழ்ச்சியும் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சர்வதேச ஒலிம்பிக் சங்க தலைவர் Thomas Bach, அந்நாட்டின் இளவரசர் ஐந்தாம் King Harald மற்றும் இளவரசி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களான கலந்து கொண்டனர். போட்டிகள் தொடங்கிய போது, நிகழ்த்த வாண வேடிக்கையை ஏராளமானோர் கண்டு களித்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00