முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்த நாளையொட்டி, திருநெல்வேலி மாவட்டத்தில் அகில இந்திய கபடிப் போட்டி : தூத்துக்குடி, மும்பை அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின

Feb 7 2016 1:35PM
எழுத்தின் அளவு: அ + அ -

முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவின் பிறந்த நாளையொட்டி, திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை அருகே நடைபெற்று வரும் அகில இந்திய கபடிப் போட்டியில், தூத்துக்குடி, மும்பை அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின.

முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதாவின் 68-வது பிறந்த நாளையொட்டி, திருநெல்வேலி புறநகர் மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞரணி சார்பில், அகில இந்திய மின்னொளி கபடிப் போட்டி திசையன்விளை அருகே உள்ள அப்புவிளையில் நடைபெற்று வருகிறது. ஆண்கள் பிரிவில் தமிழகம், ஹரியானா, மஹாராஷ்ட்டிரா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த 20 அணிகளும், பெண்கள் பிரிவில் டெல்லி, கேரளா, கர்நாடகா, பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த 18 அணிகளும் பங்கேற்றுள்ளன. ஆண்களுக்கான பிரிவில் நேற்றிரவு லீக் போட்டிகள் நிறைவடைந்த நிலையில், தொடர்ந்து காலிறுதிப் போட்டிகள் நடைபெற்றன. இதில், மும்பை அணி, கேரளா அணியை 27-11 என்ற புள்ளிக் கணக்கில் வென்றும், தூத்துக்குடி மாவட்ட அணி தெலங்கானா போலீஸ் அணியை 32-29 என்ற புள்ளிக் கணக்கிலும் வென்று அரையிறுதிக்கு முன்னேறின. முதலிடம் பெறும் அணிகளுக்கு முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா படம் பொறிக்கப்பட்ட கோப்பையும், மற்ற 3 இடங்களைப் பெறும் அணிகளுக்கு பதக்கங்களும், ரொக்கப் பரிசுகளும் அளிக்கப்படவுள்ளன.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00