தூத்துக்குடி மாவட்டம் விளாத்திக்குளத்தில் நடைபெற்ற தென்மாவட்டங்களுக்கு இடையேயான கபாடிப் போட்டி : தூத்துக்குடி, கன்னியாகுமரி அணிகள் கோப்பையை வென்றன

Nov 28 2015 8:07AM
எழுத்தின் அளவு: அ + அ -

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திக்குளத்தில் நடைபெற்ற தென்மாவட்டங்களுக்கு இடையேயான கபாடிப் போட்டியில், தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்ட அணிகள் கோப்பையை வென்றுள்ளன.

அ.இ.அ.தி.மு.க.வின் 44 ஆம் ஆண்டின் துவக்க விழாவை முன்னிட்டு, கழகத்தின் சார்பில் தென்மாவட்டங்களுக்கு இடையே ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவுகளில் கபாடிப் போட்டி மற்றும் கைப்பந்துப் போட்டிகள் விளாத்திக்குளத்தில் நடைபெற்றன. இறுதிப் போட்டிகளை அமைச்சர்கள் திரு. நத்தம் இரா. விசுவநாதன், திரு. S.P. சண்முகநாதன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். பெண்கள் கபாடி இறுதிப் போட்டியில் கன்னியாகுமரி அணி, மதுரை மாவட்ட அணியை 24-22 என்ற புள்ளிகளிலும், ஆண்கள் கபாடி பிரிவில் தூத்துக்குடி அணி அதே மாவட்டத்தைச் சேர்ந்த படர்ந்தபுளி அணியை 31-29 என்ற புள்ளிக் கணக்கிலும் வென்று கோப்பையைக் கைப்பற்றின. இதேபோன்று, கைப்பந்து இறுதிப்போட்டியில், நெல்லை மாநகர காவல்துறை அணி, வேடப்பண்டி அணியை 25-16, 25-17 என்ற செட்களில் வென்று கோப்பையை பெற்றது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00